Monday, July 4, 2016

சிச்சிலி ,மொழி என் எதிரி என்ற லீனாவின் இரு நூல்கள் வெளியீட்டு விழா:




தமிழ் இலக்கியத்தின் முக்கிய ஆளுமைகள் படைப்பாளிகள் இயக்குநர்கள் ஓவியர்கள் கவிஞர்களென அரங்கமே நிரம்பி வழிந்தது. 

ஈஞ்சம்பாக்கம் சென்னையிலிருந்து நல்ல தூரம். அப்படியிருந்தும் யாவரும் வந்திருந்து விழாவை நிறைவுறச் செய்தது யாவருக்கும் பெரும் மகிழ்வைத் தந்ததென்றே சொல்ல வேண்டும்.

லீனா வந்திருந்தவர்களுக்கு தன் மாறா அன்புடன் விருந்தளித்தார். சரியாக நான்கு மணிக்கு விழா நூல் வெளியீட்டுடன் தொடங்கியது. 

இதுபோன்ற விழாவினை சென்னை நகரத்தினுள் நடத்துகிறபோது வருகின்ற கூட்டத்தைவிட சென்னை வெளிபுறத்தில் கூட்டம் நடத்தி கூட்டத்தை நிறைவாக நடத்துவதென்பது முடியாத காரியம். ஆனால் ஈஞ்சம்பாக்கம் ஆர்டிஸ்ட் வில்லேஜில் லீனாவின் இரு நூல்கள் வெளியீடு எப்போதும் யாருக்கும் நடக்காதது போல் ; உண்மையில் இவ்வளவு பெரியகூட்டம் அன்பிற்காகவும் இலக்கியத்திற்காகவும் கூடியதெனில் மிகையில்லை.

No comments:

Post a Comment

இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில்,

  இலங்கைக்கு ₹258 கோடிக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களைக் கடத்திய கும்பல் தொடர்பான பணமோசடி விசாரணையில், அமலாக்கத்துறை (ED) சென்னை மற்று...