Saturday, June 16, 2018

நிலையற்ற நீர்க்குமிழிக் கூட நினைவில் இருக்கும் சுயசிந்தனை அற்றவர்கள் நினைவில் நிற்பதில்லை.

நிலையற்ற நீர்க்குமிழிக் கூட நினைவில் இருக்கும் சுயசிந்தனை அற்றவர்கள் நினைவில் நிற்பதில்லை.

முதலமைச்சர் காமராசர் அவர்களின் அமைச்சரவை என்றால் சி.சுப்ரமணியம், ஆர். வெங்கட்ராமன், பக்தவச்சலம், மன்றாடியார்,கக்கன்,மஜீத் போன்றோர்களின் பெயர்கள் சட்டென்று நினைவைத் எட்டும். 

பேரரிஞர் அண்ணா அவர்களின் அமைச்சரவை என்றால் நாவலர், கலைஞர், கே.ஏ.மதியழகன், சாதிக்பாட்சா போன்றவர்கள் நினைவுக்கு வருவார்கள்.

தலைவர் கலைஞர் அவர்களின் அமைச்சரவை என்றால்  நாவலர், பேராசிரியர், சாதிக்பாட்சா, செ.மாதவன் மற்றும் இளைய அமைச்சர்கள் பலரின் பெயர்கள்  நினைவில் உள்ளது. 

எம்.ஜி.ஆர் அமைச்சரவை என்றால் நாவலர், க.ராசாராம்,பண்ருட்டி ராமச்சந்திரன் , ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் பெயர்கள் நினைவில் வந்து விழுகின்றது 

இவர்களின் அல்லது இவர்களைப் போன்றோர் பெயர்கள் மட்டுமல்லாது அவர்களின் பணிகள் நம்மிடையே அவர்களை நிலைநிறுத்தி இருக்கின்றார்கள் அதனால் தான் காலத்தால் அய்ம்பது ஆண்டுகள் ஆனாலும் அவர்களின் பெயர்கள் சொடுக்குப் போடும் விநாடியில் விரல் நுனியில் வந்து விழுகின்றது..

ஆனால் ஜெயலலிதா அமைச்சரவைவில் விழுந்தே கிடந்த காரணத்தால் எந்த பெயரும் நினைவில் எழுவதில்லை. காரணம் அமைச்சர் பொறுப்பை நிலையில்லாமல் கையில் பிடித்துக் கொண்டு எப்போது நழுவுமோ என நிலையற்ற மனிதர்கள் பெயர்கள் நம் நினைவில் மட்டும் எப்படி நிற்கும். இவர்கள் சுயசிந்தனை அற்றவர்கள். இவர்கள் தான் மக்களைப் பற்றி சிந்திப்பார்களா.  இவர்கள் அங்கம் வகிக்கும் அமைச்சரவை மக்களுக்கான ஆட்சி என்றால் அது ஜனநாயகத்திற்கு கேடாக விளையும். 

காலத்தால் செயற்கரிய செயல்கள்  செய்தால் மட்டுமே வாழ்காலத்தை மிஞ்சியும் எஞ்சி நிற்க முடியும். 

#நிலையற்றமனிதர்கள் 
#மக்களாட்சி 
#KSRadhakrishnanpostings
#KSRpostings 
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்* 
14-06-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...