Saturday, June 16, 2018

*தூக்கு தண்டனை தூக்கிலிடப்பட்ட நிகழ்வு. அன்றைக்கு முடிந்தது !இன்றைக்கு........??*



-----------------

இராஜீவ் படுகொலையில் குற்றஞ்சாட்டப்பட்ட 7 பேருடைய தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டு அவர்களுடைய விடுதலைக்கான பரிந்துரையை குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்ட செய்தியை நேற்று வேதனையோடு அறிந்தோம். 

இந்த வழக்கைப் போன்றே உச்சநீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்து, குடியரசுத்தலைவர் கருணை மனுக்கள்  தள்ளுபடியாகி, இனிவேறு வழியில்லை என கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டு, தூக்குதண்டனை உறுதி செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை 48 மணி நேரத்தில் தூக்குதண்டனைநிறைவேற்றப்பட
விருந்ததை வெறும் இரண்டு வார்த்தை தந்தியால் காப்பாற்றி;பின்னர் சென்னை உயர் நீதிமன்றத்தால் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு விடுதலையும் ஆகிவிட்டார். அன்றைக்கு வைகோ அவர்களின்முயற்சியில் ,
பாளையங்கோட்டை மத்திய சிறையிலிருந்த தூக்கு தண்டனை கைது குருசாமி நாயக்கரை காப்பாற்றுவதற்காக அடியேனும் இந்த வழக்கை கவனித்தேன். அன்றைக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில்
நீதிபதிகள்  வி. இராமசாமி, டேவிட் அண்ணுசாமி அடங்கிய பெஞ்சில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது. அதன் முழுப்பணிகளையும் நான் செய்ய போது அப்போதெல்லாம் இம்மாதிரியான வசதிகள்,ஊடகங்கள் இல்லாத நேரத்தில் செய்தோமே. 

இந்த சென்னை உயர் நீதிமன்றத்தினைப் போல உச்ச நீதிமன்றத்திலும் குருசாமி நாயக்கர் தந்தி கொடுத்தார். மூத்த வழக்கறிஞர் கார்க் ஆஜராகி, அங்கும் வழக்கு ஏற்றுக் கொள்ளப்பட்டு, பின் டெல்லியில் இருந்த வழக்கு திரும்பப் பெறப்பட்டது. நீதித்துறை வரலாற்றில் குடியரசுத் தலைவர் கருணை மனுவை நிராகரித்த பின் ஒரு உயர் நீதிமன்றம் குடியரசுத் தலைவருடைய ஆணையை ரத்து செய்தது இந்த வழக்கில் தான். 
குருசாமி நாயக்கரின் தீர்ப்பை சுட்டி காட்டி வாதாடி வழக்கறிஞர் பி.எச்.பாண்டியன் (அப்போது தமிழக சட்டப் பேரவை துணைத்தலைவர்) மகாளி நாடார் வழக்கில் தூக்கு தண்டனையை ஆயுள் தண்டனையாக உத்தரவு பெறப்பட்டது.

அன்று சாதிக்க முடிந்தது. இப்போது சாதிக்க முடியவில்லையே என்று வினாக்கள் எழுகின்றன. இதில் அகப் புறக் காரணங்கள் பல இருக்குமோ என்ற சந்தேகமும் எழுகின்றன. இந்த 7 பேரும் 27 வருடமாக தண்டனை அனுபவித்துவிட்டனர். இதற்கு மேலும் இவர்களுக்கு தண்டனை தேவையா என்பதை இந்த நாடு சிந்திக்க வேண்டும். 

(தூக்கு தண்டனை குறித்து உயிர்மை பதிப்பகத்தால் 2007இல் வெளியான நூல்.)

#Hanging_death_penalty
#தூக்கு_தண்டனை
#தூக்குக்கு_தூக்கு
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
16-06-2018

No comments:

Post a Comment