-------------------------
இலங்கையின் பாதுகாப்புக்கு 360 கோடி ரூபாய் இந்திய அரசு வழங்குகிறது. சீனாவிடம் இணக்கமான போக்கினை கடைபிடித்து வரும் இலங்கைக்கு இந்தியா எந்த அடிப்படையில் இந்த நிதியை வழங்குகிறது எனத் தெரியவில்லை. சீனாவின் நம்பிக்கைக்குரிய இலங்கைக்கு வழங்க உள்ள இந்த நிதி உதவியால் இந்தியாவிற்கு என்ன பயன் கிடைக்கும் என்பதும் கேள்விக்குறிதான்.
இந்து மகா சமுத்திரத்தில் திரிகோணமலையிலும், அமெரிக்கா, ஜப்பான், பிரிட்டன், பிரான்ஸ் போன்ற உலக நாடுகள் நுழைந்துள்ளது. சீனாவும் இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் பட்டு வழி வணிகப் பாதை, அம்பன்தோட்டா துறைமுகம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் வழங்கி வருகிறது. ஏற்கனவே இந்திய அரசு ஈழத்தமிழர் மறுவாழ்வுக்காக இலங்கைக்கு வழங்கப்பட்ட நிதியை முழுமையாக பயன்படுத்தாமல் உள்ளது. தமிழர் பகுதிகளில் வீடுகளும் முழுமையாக கட்டித்தராமல் 18000 வீடுகள் மட்டுமே கட்டப்பட்டு உள்ளது.
ஏற்கனவே ஈழத்தமிழர் மறுவாழ்வுக்காக இந்தியா வழங்கிய நிதியில் தென்னிலங்கையில் ராஜபக்சவின் சொந்த வட்டாரத்தில் காலேவில் பெரிய ரயில்வே சந்திப்பு நிலையம் கட்டி அன்றைய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா அதையும் திறந்து வைத்தார்.
எப்படி கடந்த காலத்தில் அங்குள்ள தமிழர்களுக்கு வழங்கிய நிதியை எல்லாம் சிங்களர்களுக்குப் பயன்படுத்தினார்களோ, அதுபோலவே இலங்கைப் பாதுகாப்புக்கு வழங்கிய நிதியை அந்த நோக்கத்திற்கு பயன்படுத்தாமல் ஈழத்தமிழருக்கு விரோதமாகவும் பயன்படுத்தலாம் என்பதையும் இந்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.
இன்றைய புவியரசியலில் இந்திய அரசின் இந்த நிதியுதவி எத்தகைய நிலையில் இந்தியாவுக்கு பயனளிக்குமா என்பது தான் முக்கியமான விடயம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-01-2020
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
#ஈழத்தமிழர்
No comments:
Post a Comment