Sunday, January 19, 2020

தமிழ்க் கவிஞர்களின் அந்தக் கால ஜாகை

மயிலை மாங்கொல்லை வடக்கு மாட வீதி கிழக்கு மாட வீதி சந்திப்பில் இன்றைக்கும் இருக்கும் இந்த பழைய கட்டிடத்தில் தான் வானம்பாடி கவிஞர்கள் ஜாகையாக ஒரு காலத்தில் பயன்படுத்தியது உண்டு. நவீன இலக்கியத்திற்கு ஆரம்பகட்ட குரல்கள் ஆயத்தங்கள் எல்லாம் இங்கிருந்து கேட்கப்பட்டது, எடுக்கப்பட்டது. இதுவொரு அடையாளமாக திகழ்ந்தாலும் இன்றைய சமுதாயம் அறியாத இடமாகும். எத்தனையோ முறை இந்த பகுதியில் 1970களில் தங்கியிருந்த காலத்தில் இருந்தே இந்த கட்டிடத்தை பார்த்துக் கொண்டே நடந்துச் செல்வது உண்டு. முதன்முதலாக நா. பார்த்தசாரதி தான் இந்த கட்டிடத்திற்குள்ளே என்னை அழைத்துச் சென்றார். கு.அழகிரிசாமி, அகிலன், வல்லிக்கண்ணு, திகசி, லாசாரா, நாரண துரைக்கண்ணன் போன்ற அந்தக் காலத்து படைப்பாளிகளின் காலடிகள் பட்டன என்று பலர் சொல்லி கேட்டுள்ளேன். 

இந்த மாங்கொல்லையில் பேசாத தலைவர்கள் கிடையாது. பண்டித நேரு, ஓமாந்தூரார், ராஜாஜி, அண்ணா, சத்தியமூர்த்தி, ஜெயபிரகாஷ் நாராயண் காமராஜர், கலைஞர், எம்.ஜி.ஆர், பி.ராமமூர்த்தி, ஈ.எம்.எஸ். நம்பூதரி பாத், தாரகேஸ்வர சின்கா,  எம். கல்யாணசுந்தரம், நீலம் சஞ்சீவ ரெட்டி என நீண்ட பட்டியல் உண்டு. மாங்கொல்லையில் பொதுக்கூட்டத்தில் பேசுவதென்றால் அந்த காலத்தில் பெருமை கொள்வார்கள்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19.01.2020
#ksrposts
#ksradhakrishnanposts
#வானம்பாடி_கவிஞர்கள்
#மாங்கொல்லை

No comments:

Post a Comment

*Be yourself, none is perfect, to get everything right*.

*Be yourself, none is perfect, to get everything right*. If something goes wrong, that is completely okay, it happens. Step up to get things...