Friday, January 31, 2020

தஞ்சை_ஸ்வாமிநாத_ஆத்ரேய: #மணிக்கொடி_மரபினர்.

நா. விச்வநாதன்-பதிவு

#தஞ்சை_ஸ்வாமிநாத_ஆத்ரேய:
                    #மணிக்கொடி_மரபினர்.

ஆத்ரேயர் என்ற'மணிக்கொடி' எழுத்தாளர் வெகுவாக அறியப்படாமல் போனதற்குக்காரணம்அவரேதான்.
வீடுதாண்டி வெளியேவராத ரிஷி என்று கிண்டல் செய்வோம்.தானுண்டு,தன் எழுத்துண்டு,தன்சங்கீதமுண்டு என்று சுருக்கிக் கொண்டவர்.தன்மீது புகழ் வெளிச்சம் படாதவாறு
கவனமாகப் பார்த்துக் கொண்டார்.சொற்
பமான சொற்கள், குறைந்த உரையாடல்.
ஞானம் அடக்கத்தைக் கொடுக்கும் என்
பதை ஆத்ரேயரிடமிருந்து அறியலாம்.எங்
களிடம் ஓர் இசைவு இருந்தது.கொஞ்சம்
நாங்கள் இடக்குமடக்கான ஆட்கள் என்று
தெரிந்தும் எங்களது தினசரி வருகை அவருக்கு இஷ்டமானது.

சிவந்த உடம்பு,நெற்றிக் கோபிசந்தனம்,
குடுமி,பஞ்சகச்சம்,ஒருவார வெள்ளைத் தாடி, களையான முகம்.ஆசாரத்தோற்றம்
புரட்சிகர மனசு.சதா ராம் ராம் என்ற உச்ச
ரிப்பு.ந.பிச்சமூர்த்தி,தி.ஜானகிராமன்,
மௌனி,எம்.வி.வி,கரிச்சான் குஞ்சு என
ஏகப்பட்ட எழுத்தாளர்கள் இவரது நெருங்
கிய சிநேகிதங்கள்.தி.ஜானகிராமனோடு
முரண்படுவார்.கரிச்சான் குஞ்சு வின் அட்
டகாசமான அடாவடி நக்கல் பேச்சுகளுக்
கு ஆத்ரேயரால் ஈடுகொடுக்க முடியாது.

வ.ரா,தி.ச.சொக்கலிங்கம்,ஸ்டாலின் சீனி
வாசன் என இந்த ஆளுமைகளைவிவரி
ப்பார்.மணிக்கொடிக்காலம் பற்றிய செய்
திகள் அத்துப்படி. மாணிக்கவீணை,
தியாகராஜ அனுபவங்கள் முக்கியமான 
நூல்கள்.பிரதிகள் இப்போது கிடைக்க
வில்லை.கச்சிதமான விவரிப்பு,நேர்த்தி
யான வடிவம்.அழகிய நடை.  உலகமே
நேர்மையானதுதான் என்ற அறிவிப்பு.
ஜானகிராமனின் அம்மாவந்தாளைக்கடு
மையாகச் சாடினார்.எம்விவியின் வேள்
வித் தீ யில் சில இடங்களை ரசிக்கவில்
லை.அழுக்கைச் சுரண்டிக் கொண்டிருப்
பானேன் என்பது அவரது வாதம்.கு.ப.ரா
விடமிருந்தும் மாறுபடுவார்.மனித வாழ்வு
குறைநிறைகளோடுதான் என்றால்"சக்க
னிராஜ. மார்க்கமு லுண்டக..என்ற தியாக
ராஜரின் கிருதியை பதிலாக முணு
முணுப்பார்.'அழகான வீதிகள் இருக்கும்
போது இருட்டுச் சந்துக்குள் நுழைவானே
ன்..'

தியாகராஜ ஸ்வாமிகளை புதிய கோணத்
தில் பார்த்தார்.சத்குருவின் கீர்த்தனைக
ளில் கவித்துவமே இல்லையே என்றதற்
குப்பக்திதான் அவருக்குப் பிரதானம் என்
பார்.சத்குருவின் கீர்த்தனைகளை யாரும்
பாவசுத்தியோடும் அட்சரசுத்தியோடும்
பாடவில்லை என்றகுறை அவருக்குண்டு.
"தியாகராஜ அனுபவங்களில்"ஒவ்வொரு
கிருதிகளுக்குப்பின்னாலும் நிஜமான சம்பவங்கள் உள்ளன.உமையாள்புரம்
சாமிநாதபாகவதர்,யக்ஞசாமி சாஸ்த்ரி
எம்பார்விஜயராகவாச்சாரியார் உரையாட
ல்களிலிருந்து பெற்றவை என்று சொன்
னார்.
சத்குருவிற்கு அருணாச்சலக்கவியின்
இராமநாடகக் கீர்த்தனைகளில் அளவற்
ற ஈடுபாடு.இரவுமுழுதும் நாடகத்தைப்
பார்த்தாராம்.மேடைக்கு அழைக்கப்பட்ட
போது ராமனாக நடித்த பொற்கொல்ல
ரைக் கட்டியணைத்துக்கொண்டாராம்.
தன்னுடைய மேல் துண்டால் அவரது
வேர்வையைத் துடைத்துவிட்டாராம்.
"யதா. வுனா...நேர்ச்சிடவே.."என்ற யது
குலக்காம்போதி கீர்த்தனைதோன்றியது.
மராத்திய ராஜா  சகஜி சத்குருவைத் தன்
ஆஸ்தான வித்வானாக அழைத்தபோது
"நிதி சால சொகமா"என்ற கல்யாணியை
பாடியதாகச் சொல்வதை ஆத்ரேயர் மறு
த்தார்.இது கட்டுக்கதை என்றார்.இதுபோ
லவே "மனசுலோனி..இந்தோளத்திற்குப்
பின்னுள்ள அனுபவங்களை விவரிப்பார்.
தன்னுடைய "பாலுகா...காண்ட..சகேரா.'
கீர்த்தனையை நாட்டியமணிகள் மிகமிக
மோசமாகப் பாடி ஆடியதைக்கண்டு வரு
த்தமுற்று "மனசுலோனி மர்மமூ தெலு
கோ மான... ரக்ஷக.. மரகதாங்க..நா.."என்
மனதில் உள்ள மர்மங்கள் அனைத்தை
யும் தெரிந்துகொண்டு என்னைக் காப்பா
ற்று. பக்தர்களையும் காப்பாற்று ராமா..!
கைதூக்கி விடு..ராமா.என்றுபாடினாராம்.
ஷட்காலகோவிந்தமாரார் என்ற கேரள
இசை வல்லுநர் சந்திப்பின்போது மாரார்
உச்சஸ்தாயி பரவசப்படுத்த 'எந்தரோ மஹானு பாவுலு..."ஸ்ரீராகம்  பாடினார்.
கோபாலகிருஷ்ணபாரதி தன்னைக்கா
ண வந்தபோது ஆபோகி பாடேன் என்ற
தற்காகப்   "சபாபதிக்கு. வேறு..தெய்வம்
..சமான..' கோபாலகிருஷ்ணபாரதி பாடிக்
காண்பித்தார்.

ஸ்வாமி நாத ஆத்ரேயருக்கு அவரது தனி
மையே படுக்கையில் தள்ளியது.மரண
மில்லாத வாழ்வு தாங்கமுடியாத துன்பம்
தான் தனிமைவிரும்பிகளுக்கு.ஆத்ரேய
ருக்கும் இது நேர்ந்தது.
'''''''


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...