Thursday, January 30, 2020

#ஆந்திர #மேலவை_ஒழிக்கப்படுகிறது.

#ஆந்திர #மேலவை_ஒழிக்கப்படுகிறது.நாடாளுமன்ற   ஜனநாயகத்தில் இருஅவைகள் (bicameral ) என்பது அடிப்படை.  இந்தியாவில்   பல மாநிலங்களில் தமிழ்நாடு  உள்பட எம்.ஜி.ஆர் ஆட்சியில் மேலவை ஒழிக்கப்பட்டது. இவையெல்லாம் நாடாளமன்ற ஜனநாயகத்திற்கு சவால் மட்டுமல்லாமல்  அதை குழி  தோன்டிப் புதைக்கும் நடவடிக்கையாகும். தமிழகத்தின் மேலவை  எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில் நடிகை நிர்மலா மேலவை உறுப்பினர் (எம்.எல்.சி) ஆக முடியவில்லை என்ற காரணத்திற்காகவே பல மேன் மக்கள் அமர்ந்த தமிழக மேலவையை  ஒழித்துக் கட்டினார். மத்திய அரசு இந்த நடவடிக்கைகளை எல்லாம்  ஏற்றுக்  கொண்டு நாடாளுமன்றத்தின் இருஅவைகளில் தீர்மானம் மூலமாக ஏற்றுக் கொள்கிறது என்றால்  மாநிலங்களவையும் ஒழிக்கப்பட  வேண்டிய  நிலைதானே. மாநிலங்களவைக்கு என்று ஒரு மாண்பு உண்டு. கற்றறிந்தவர்களின்கருத்துகளை சொல்லி நாட்டிற்கு சரியாக வழிகாட்டும் கருத்துகளை சொல்ல வேண்டிய அவை தான் மேலவை. தேர்தல் களத்தினை சில அறிஞர் பெருமக்கள் சந்திக்க இயலாது. அவர்களெல்லாம் மேலவைக்கு வந்தால் அவர்களுடைய   கருத்துகளால் ஜனநாயகம்    தழைத்தோங்கும். மாநிலங்களவையை வைத்துக் கொண்டு மாநிலங்களின் மேலவையை தங்களின் விருப்பத்திற்கேற்றவாறு  ஒழிப்பது என்பது ஏற்புடையதல்ல. 

தமிழகத்தில்  மேலவை   திரும்பவும் அமைய வேண்டுமென்று    சென்னை உயர்நீதிமன்றத்தில்.  (WPNo.4399
2000))வழக்கும்தொடுத்தேன்.சென்னை உயர்நீதி மன்றமும் என்  மனுவை 2000இல்  ஏற்றுக்கொண்டு  உரிய  உத்தரவுகளை பிறப்பித்தும் அன்றைக்கு நடைமுறைக்கு  வராதது  வேதனை அளிக்கிறது. இது   தொடர்பாக வெளியான எனது நூலும் வெளிவந்துள்ளது.

இதுகுறித்து எனது பதிவு வருமாறு. 

https://bit.ly/2uGOhzB 

#தமிழக_மேலவை
#தமிழக_அரசியல்
#tamil_nadu_legislative_counil
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
30-01-2020


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...