———————————————-
கோவிபட்டி,சிவகாசி,இராஜபாளையம்,
சங்கரன் கோவில் என்று பள்ளியில் படிக்கும் போது கல்லூரி காலங்களில் திருநெல்வேலி, மதுரை என பின்நாட்களில் சென்னையில் தனியாக
அச்சிட்ட பொங்கல் வாழ்த்து அட்டைகளை பொறுக்கியெடுத்த ஞாபகங்கள்...நமக்கு வந்த வாழ்த்துகளை பாதுகாப்பதும் உண்டு.
கடந்த1994 அவரை போஸட் ஆபிசில் ஸ்டாம்ப் வாங்கி ஒட்டி அனுப்பாமல் தூக்கம் வராது. இன்று வாட்ஸ் அப்பில் வாழ்த்துகள் குவிகின்றன. காலம் மாறிவிட்டது என்பதை தலைமுறை தலைமுறையாக இப்படித்தான் எல்லோருமே பேசியிருப்பார்கள். இப்போது நாம் பேசுகிறோம். காலம் அழகானது...
ஆனால் புத்தாண்டு,பொங்கல் வாழ்த்து
அட்டைகள் மீது இப்போது பெரிய கவனம் இல்லை.
#பழையபொங்கல்வாழ்த்து_அட்டைகள்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
16-1-2020.
#KSRPostings
#KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment