#மாட்டுவண்டி...
#மங்களேஸ்வரி_மங்களநாத_சுவாமி_கோவில்
#உத்தரகோசமங்கை
இராமநாதபுரம் மாவட்டம்...
இதோ புகைப்படத்தில் நீங்கள் காணும் மாட்டு வண்டிக்கு 16-17 நூற்றாண்டு கால வரலாறு உள்ளது.
இந்த கோவில் பாண்டியர்கள் காலத்தில் கட்டப்பட்டது. இதன் புனரமைப்பு 16ம் நூற்றாண்டில் #கிழவன்_சேதுபதியால் நடத்தப்பட்டது. இவரது ஆட்சி காலம் 1674-1710 வரை நடந்தது.அப்போது கோவில் புனரமைப்பு பணிக்கு வாலிநோக்கம் கடற்கரை பகுதியில் இருந்த பெரும் பாறைகள் கோவில் திருப்பணிக்கு பயன்படுத்தப்பட்டது. அங்கிருந்து கடற்பாறைகளை கோவிலுக்கு கொண்டு வருவதற்காக இரட்டை மாட்டுவண்டி பயன்படுத்தப்பட்டது.
அப்போதய காலகட்டத்தில் தமிழர்கள் பயணத்திற்கு மாட்டுவண்டி, குதிரை பூட்டிய சாரட் வண்டிகளை பயன்படுத்தினர். சரக்குககள் கையாள்வதற்கு மாட்டு வண்டிகளை அதிகம் நம்பி இருந்தனர்.
அத்தகைய கோவில் திருப்பணிக்கு கடற்பாறைகள் கொண்டு வரப்பயன்பட்ட 16,17 ம் நூற்றாண்டில் வடிவமைக்கப்பட்ட மாட்டு வண்டியை ராமநாதபுரம் சமஸ்தானம் சார்பில் இன்றும் இக்கோவிலில் வைத்து பக்தர்கள் காட்சிக்காக இன்றும் கோவிலில் வைத்து பாதுகாத்து வருகின்றனர்.
மாட்டு வண்டிகளை பார்ப்பதே அரிதாகி உள்ள நிலையில் கோவில் நிர்வாகம் பாதுகாத்து வரும் மாட்டுவண்டி வரும் தலைமுறைக்கு ஒரு நினைவுப் பொருளாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை...
#புகைப்படம்: எனது சேமிப்பிலிருந்து...
#தினமலர்
#பொங்கல்_மலர்
#பக்கம்_11
Courtesy: Sridhar Babu
No comments:
Post a Comment