#போகிப்_பண்டிகை .....
———————————————-
பழையன கழிதலும் புதியன புகுதலும் - போகி
நமக்குத் தெரிந்த போகிப் பண்டிகையாவது:
வீட்டில் இருக்கும் , பழைய உபயோகமில்லாத பொருட்கள், பழைய துணிகள் எல்லாம் அள்ளி, தெருக்கோடியில் போட்டு எரித்துவிடுவது இல்லையா. அப்படியே செய்து மகிழ்கிறோம். உண்மையான போகிப்பண்டிகை அதுவல்ல.
அர்த்தமுள்ள இந்து மதம் எனற புத்தகத்தில், ஒரு பதிப்பில் கவிஞர் கண்ணதாசன் கூட குறிப்பிட்டுள்ளார். தமிழர்கள் மட்டுமே கொண்டாடும் பொங்கல் திருநாளின் முதல் நாள் போகிப்பண்டிகை . “போகம் பண்டிகை” தான் மருவி காலப்போக்கில் “போகிப்பண்டிகை” ஆனது . அதாவது பொங்கலானது தமிழர் திருநாள் . இதை உழவர் திருநாள் என்று தான் அழைத்தனர் நம் முன்னோர்கள். உழவு தொழில் குறைந்து போகவே, உழவர் திருநாள் கூட தமிழர் திருநாள் ஆனது . போகம்பண்டிகை, பொங்கல் , மாட்டுப்பொங்கல், காணும்பொங்கல் இவை எல்லாமே உழவன் சம்மந்தப்பட்ட திருநாட்களே. ஐப்பசியில் நாற்று நட்டு , தொன்நூறு நாள் பேணிக்காத்து, மார்கழி இறுதியில் அறுவடை செய்து. புது நெல்மணியை வீட்டிற்குள் கொண்டுவரும் திருநாளே “போகம்பண்டிகை”. போகம் என்ற தமிழ் சொல்லுக்கு விளைச்சல் என்று பொருள் . உழவன் இந்த ஆண்டு எவ்வளவு போகம் ஆனது என்பதை கணக்கிட்டு கொண்டாடும் நாளே : போகம்பண்டிகை.
பழைய இருப்பு தானியம் ( நெல் ) இருப்பின் அவைகளை வெளியேற்றி விட்டு, மார்கழி யில் அறுவடை செய்த புதுவரவான தானியத்தை வீட்டினுள் புகுத்தி மகிழும் திருநாள்
“ போகம் பண்டிகை “. இதுவே காலப்போக்கில் மருவி “போகிப்பண்டிகை” என அர்த்தமில்லா நாளானது. மனவருத்தத்துடன் பகிர்கிறேன் விவசாயிகள் குறைந்த நாட்டில் நாம் “போகம்பண்டிகை” யை தான் “போகிப்பண்டிகை” யாக கொண்டாடுகிறோம்..
#ksrpost
14-1-2020.
No comments:
Post a Comment