——————————-
பேராசிரியர் ரா.பி. சேது பிள்ளைக்கு அவரின் படைப்பு,தமிழின்பம் என்ற நூலுக்கு சாகித்ய அகாடமி விருது 1955ல் வழங்கப்பட்டது. அந்த விருது மூலம பரிசு தொகையான ஒரு லட்சம் ரூபாயை நெல்லை நகராட்சிக்கு (அப்போது திருநெல்வேலி நகராட்சி) வழங்கி அவர் பெயரில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனை திருநெல்வேலி கண்டியபேரியில் நகராட்சியால் தொடங்கப்பட்டது. அன்றைய சாகித்ய அகாடமி பரிசு தொகையில் மக்களுக்கு பயன் பாடுக்கு பொது மருத்துமனையையே தொடங்க முடிந்திருக்கிறது.
(ரா. பி. சேதுப்பிள்ளை (மார்ச் 2, 1896 - ஏப்ரல் 25, 1961) ஒரு தமிழறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர். இனிய உரைச் செய்யுள் எனக் குறிப்பிடும் அளவுக்கு அவரது உரைநடை இனிமை வாய்ந்தது எனப் பலரும் பாராட்டியுள்ளனர். உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே எனப்படுகின்றது.)
#ரா_பி_சேது_பிள்ளை
கே. எஸ். இராதாகிருஷ்ணன்
14-01-2020.
#KSRpostings
#KSRadhakrishnanPostings
No comments:
Post a Comment