Sunday, January 12, 2020

#மணாவின் #மறக்க_முடியாத_முகங்கள்



#மணாவின் #மறக்க_முடியாத_முகங்கள்

---------------------------------------------

நண்பர் மணாவின் ‘மறக்காத முகங்கள்’, ‘தமிழகத் தடங்கள்’ என்ற இரண்டு நூல்களை அந்திமழை வெளியிடுகின்றது. அந்திமழை இளங்கோவன், அசோகன் ஆகியோரது முயற்சியில் சிறப்பாக வெளிவந்துள்ள இரண்டு நூல்களையும் திரு. மணா இன்று அனுப்பிவைத்தார். மறக்காத முகங்களில் எம்.ஜி.ஆர்., சிவாஜி என திரையுலக ஆளுமைகளைக் குறித்தான பல செய்திகளும், தரவுகளும் திரட்டி எழுதியுள்ளார். எனக்கு பரிச்சயமான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி, நாகேஷ், பி.பி.ஸ்ரீனிவாஸ், நம்பியார், தேவிகா போன்றோர்களைப் பற்றி எழுதியுள்ளார். தேவிகா குடும்பத்திடம் நிலம் வாங்கி எனக்குத் தேவையான வீட்டைக் கட்டியுள்ளேன். அவர் ஒரு மறக்க முடியாத திரைத்துறை பிரபலமாவார். அவரைக் குறித்தான செய்திகளில் அவர் தன்னுடைய துக்கங்களை மறைத்து பேசும் முகபாவத்தையும், இயல்புகளையும் உளவியல் ரீதியாக மணா பட்டும் படாமல் சொல்லியுள்ளார். அவர் சந்தித்த நல்ல மனிதர்களைப் பற்றிதான் தேவிகா பேசியுள்ளார். சிவாஜி கணேசனைப் பற்றி பேசும் போது உணர்வுவயப்பட்டார் என்று மணா குறிப்பிடுகிறார். கண்ணதாசன் தன்னுடைய சகோதரராகவும் பார்த்தேன் என்றும், நடிகர் முத்துராமன், கல்யாணக்குமாரைப் பற்றியும் தேவிகா குறிப்பிடுகிறார். 
சில சிலாகிக்க முடியாத விடயங்களை எந்தவித கோபதாபத்தையும் நிதானமாக பதில் உரைத்தார். இதனால் சிலரின் தனிப்பட்டட மரியாதை பாதிக்கப்படக் கூடாது என்று யதார்த்தமாக பேசியதாக குறிப்பிட்டுள்ளார்.
அவரை நம்பியோர் ஏமாற்றியதும், அவர் சந்தித்த துரோகங்களைப் பற்றி குறிப்பிடுகையில்,
“நான் நம்பினவங்க பல பேர் என்னை ஏமாத்தியிருக்ககாங்க..
 பல துரோகங்களைச் சந்தித்திருக்கிறேன் 
 அதுக்காக நான் இடிஞ்சு போய் உட்கார்ந்திடலை
 வாழ்க்கைன்னா அப்படியும் இப்படியும் தான் இருக்கும்.
 ஏமாத்திரவங்க இருக்கிற அதே உலகத்திதேலதான் நமக்கு உதவுற நல்ல மனுஷங்களும் இருக்கிறாங்க
 அப்படித்தான் நான் எடுத்துக்குருவேன்
 பழசையே பிடிச்சுத் தொங்கிக்ட்டு மூஞ்சியை இப்படி ‘உம்’முன்னு வைச்சிட்டிருக்கக் கூடாது.
இதையும் மீறி எனக்குனு கிடைச்ச வாழ்க்கை இருக்கு.
அது போகிற போக்கில் வாழ்ந்துட்ருக்கேன்ப்பபபா,...
தத்துவார்த்தத ட்ராக்கில் திரும்பிய பேச்சு சடாரென மாறியது,,,”

“எதிரே இருந்த என்னை உற்றுப் பார்த்தபடி கைவிரல்களை ‘ஆங்கில வி’ என்ற எழுத்து மாதிரி வைத்து கொண்டு இன்னொரு கைவிரல்களையும் ‘வி’எழுத்து மாதிரி வைத்து இன்னொரு கை விரல்களையும் ‘வி’ ஷேப்பில் குறுக்கே வைத்து என்னைப் புகைப்படம் எடுப்பதைப் போன்று பாவணை காட்டினார். ஏன் உன் மூஞ்சிக்கு என்ன? இங்கே பாரு.... என்னைப் பாருப்பா... கேமிரா பொஸிஷனில் இருக்கேன்ல... பாருப்பா என்று தெலுங்கு வார்த்தைகளை இறைத்தபடி என்னைக் கேலி பண்ணியவர் சீரியஸாக முகத்தை வைத்துக் கொண்டு நிறைவாகச் சொன்னார்.

என்னோட ஹஸ்பண்டு தேவதாஸூ என்னை மிஸ் பண்ணிருச்சு. என் மகளை மிஸ் பண்ணிருச்சு... அது ... சரி. .... உன்னை எப்படிப்பா மிஸ் பண்ணிச்சு. உனக்கு சான்ஸ் கொடுக்காம ஏன்அப்படி லெட்டர் போட்டு அடி வாங்கிக் கொடுத்துச்சு? கிண்டலான தொனி கூடிக்கொண்டிருந்த நேரத்தில் அவருடைய முன்வரிசைப் பற்களுக்கு நடுவே சிறு இடைவெளி விழுந்த அந்த சிரிப்பு அழகாக இருந்தது.”

----------

இதே போன்ற சுவாரசியமாக மணாவின் தமிழகத் தடங்கள் பல அரிய செய்திகளோடு பாஞ்சாலங்குறிச்சி கோட்டை, வவுசி செக்கு, மருதுபாண்டியர் நினைவிடம், சேரன்மாதேவி பாரத்வாஜ ஆசிரமம், நெல்லை சுலோச்சன முதலியார் பாலம், வள்ளலார் வீடு, சென்னை மூர் மார்க்கெட், கீழடி உட்பட 75 இடங்களை வரலாற்றுப் பூர்வமாக எழுதிய மணாவின் தமிழகத் தடங்களை அந்திமழை சிறப்பாக எழுதியுள்ளது.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

12-01-2020.

#மறக்க_முடியாத_முகங்கள்
#தமிழ்_திரையுலகம்
#KSRpostings
#KSRadhakrishnanpostings
மணா மணா
அந்திமழை

1 comment:

  1. மிக அருமை. வாங்கிப் படித்தே ஆகவேண்டும் என்ற ஆவலைத் தூண்டுகிறது. புத்தக விழாவில் வாங்க வேண்டியவற்றில் இதுவும் எனது பட்டியலில் உள்ளது. மிக்க நன்றி.

    ReplyDelete

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...