Wednesday, January 15, 2020

ஞாயிறு போற்றுதும் !

#உத்திராயண_காலத்தில் #ஆதவன் தன் பயணத்தை  இனிதே துவங்கியிருக்கிறான்......

#ஞாயிறு_போற்றுதும் !

ஆயிரம் கரங்கள் நீட்டி
அணைக்கின்ற தாயே போற்றி
அருள் பொங்கும் முகத்தை காட்டி
இருள் நீக்கம் தந்தாய் போற்றி

தாயினும் பரிந்து சால
சகலரை அணைப்பாய் போற்றி
தழைக்கும் ஓர் உயிர்கட்கெல்லாம்
துணைக்கரம் கொடுப்பாய் போற்றி

தூயவர் இதயம் போல
துலங்கிடும் ஒளியே போற்றி
தூரத்தே நெருப்பை வைத்து
சாரத்தை தருவாய் போற்றி
ஞாயிறே நலமே வாழ்க நாயகன் வடிவே போற்றி
நானிலம் உளநாள் மட்டும்
போற்றுவோம் போற்றி போற்றி

#Pongal
#பொங்கல்
#Makara_Sankranti

கே. எஸ். இராதாகிருஷ்ணன்
15-01-2020.

#KSRpostings
#KSRadhakrishnanPostings


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...