Saturday, January 11, 2020

டாக்டர். சௌந்தரம்மாள் – டாக்டர். ராமச்சந்திரன் (காந்தி கிராமம்). இவர்கள் தான் புரட்சியாளர்கள்.

டாக்டர். சௌந்தரம்மாள் – டாக்டர். ராமச்சந்திரன் (காந்தி கிராமம்).
இவர்கள் தான் புரட்சியாளர்கள்.
------------------------------------------
திருநெல்வேலி மாவட்டம் திருக்கறுங்குடி தான் டி.வி.எஸ் நிறுவனத்தின் அதிபர் டி.வி.சுந்தரம் ஐயங்காரின் சொந்த ஊர். இவரின் புதல்வி சௌந்தரம்மாள் அந்த ஊரிலே ஆரம்பக் கல்வி பயின்று முத்தையா பாகவதரிடம் வீணை இசையிலும், வாய்ப்பாட்டிலும் தேர்வு பெற்றார். பால்ய திருமணம் நடந்து அவர் கணவர் சௌந்தரராஜன் இறந்து விதவையானவர். சுந்தரம் ஐயங்கார் டெல்லிக்கு மருத்துவக் கல்லூரிக்கு அனுப்பப்பட்டு மருத்துவம் கற்று மதுரையில் இலவச மருத்துவப் பணியிலும், காங்கிரஸ் கட்சிப் பணியிலும் ஈடுபட்டார். 
விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த நேரம் இதே பணியில் அரிசன சேவை சங்கத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்ட கேரளத்தை சேர்ந்த ஜி. இராமச்சந்திரனை காதலித்து 1940ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 7ஆம் தேதியன்று மகாத்மா காந்தியின் முன்னிலையில் அவரை மறுமணம் செய்தார்.
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டியில் காந்தி கிராமம் என்ற ஊரை நிறுவி அங்கே காந்திய கிராமியப் பல்கலைக்கழகத்தை 1947ஆம் ஆண்டில் தொடங்கினர். நாடறிந்த ஐயங்கார் தொழிலதிபர் வீட்டில் பிறந்த பெண் காந்தியாரின் ஆசியோடு ஒடுக்கப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த கற்றறிந்த அறிஞர் ராமச்சந்திரனை 80 வருடங்களுக்கு முன்பே மணந்தார் என்பது அன்றைக்கு நினைத்துப் பார்க்க முடியுமா?
இதுதான் புரட்சியான அணுகுமுறை. டாக்டர் சௌந்தரம்மாள் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர் பண்டித நேரு காலத்தில் மத்திய ராஜாங்க கல்வித் துறை அமைச்சராக திகழ்ந்தார். இவர்தான் கட்டாய இலவச ஆரம்பக்கல்வியை அறிமுகம் செய்தார்.
இப்படிப்பட்ட ஆளுமைகளை நினைவுப்படுத்தவும் மாட்டோம். தகுதியில்லாதவர்களை புரட்சியாளர்களாக காட்டுவோம். 
கோணல் போக்கே சரியான போக்கு என்று நாமே ஏற்றுக் கொண்ட பிறகு மெய்பொருளை எப்படி ஏற்றுக் கொள்வோம்?


#TSSoundarammal
#GRamachandran
# Gandhi_Gram_Rural_University
#காந்தி_கிராம_கிராமியப்_பல்கலைக்கழகம்
#டி_எஸ்_சௌந்தரம்மாள்
#ஜி_ராமச்சந்திரன்
#KSRpostings
#KSRadhakrishnanpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
11-01-2020.

1 comment:

  1. நன்று. மிகுந்த மகிழ்ச்சி. இது போன்ற செய்திகள் இந்த தலைமுறைக்கு தெரியாது

    ReplyDelete

*Don't worry be happy*

*Don't worry be happy* and believe everything will fall into place and you will finally understand, that after all the hardships and bat...