Friday, November 27, 2020

 

#அட்டப்பாடி_நீர்ப்பாசன_திட்டம்
——————————————-








#தமிழகத்தின்_எதிர்ப்பை_தொடர்ந்து#50ஆண்டுகளுக்கும்_மேலாக #கட்டுமான_பணிகள் #நிறுத்தப்பட்டிருந்த#கேரளாவின் #அட்டப்பாடி_நீர்ப்பாசன_திட்டத்துக்கு, மத்திய நீர்வள ஆணையம், தற்போது அனுமதி அளித்துள்ளது.

தமிழக - கேரளா எல்லையில், பாலக்காடு மாவட்டத்தில், அட்டப்பாடி வன கிராமம் உள்ளது. இங்கு, விவசாயத்துக்கும், குடிநீர் தேவைக்கும், 1958ல், அட்டப்பாடி பள்ளத்தாக்கு நீர்ப்பாசன திட்ட பணிகள் துவங்கப்பட்டன. இத்திட்டத்துக்கு தமிழக கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, எல்லையில் போராட்டங்கள் நடத்தின. இதனால், திட்டம் கிடப்பில் போடப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்கு முன், கேரளா அரசு, இத்திட்டத்துக்கு புத்துயிர் அளிக்க முயன்றது. ஆனால், தமிழகத்தில் எதிர்ப்பு கிளம்பியது.கேரளா நடவடிக்கைக்கு எதிராக, தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எனினும், கேரளா அரசின் தொடர் முயற்சியால், சுற்றுச்சூழல் ஆய்வுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்தது. தற்போது இத்திட்டத்துக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இது குறித்து, கேரள அரசின்ன் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கிருஷ்ணன் குட்டி கூறியது, காவிரி நதி நீர் பங்கீடு தீர்ப்பின்படி, கேரளாவுக்கு பவானி ஆற்றிலுள்ள, 6 டி.எம்.சி., தண்ணீருக்கு உரிமம் உள்ளது. ஆனால், கேரளாவில் திட்டங்கள் ஏதும் இல்லாத காரணத்தால், இதுநாள் வரை இத்தண்ணீரை முழுமையாக தமிழகம் பயன்படுத்தி வந்துள்ளது. அட்டப்பாடி பகுதியில், 21 ஆயிரத்து 585 ஏக்கர் விவசாயத்துக்கு, 3.35 டி.எம்.சி., தண்ணீர் பயன்படும் வகையில், இத்திட்டம் தயாரிக்கப்பட்டுஉள்ளது.

#அட்டப்பாடி_நீர்ப்பாசன_திட்டம்

#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
24-06-2020

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்