ஒவ்வொரு மரமும், செடி கொடி மலர்களும் அதற்கே உண்டான ஒழுங்கு, அதற்கே உண்டான அழகு; ஒவ்வொரு மலையுச்சிக்கும் மலையடிவாரத்திற்கு அதற்கே உண்டான தன்மை, ஸ்திரத்தன்மை. மனிதன் நதியை கட்டுப்படுத்த நினைத்து அதை மாசுபடுத்திய போதிலும், நதிக்கு அதற்கே உண்டான ஓட்டம் உள்ளது, நெடுந்தூர ஓட்டதை இனிதே செய்துமுடிக்கிறது.
மனிதனை தவிர்த்து, அனைத்துமே, கடலில், காற்றில், பரந்த அண்டத்தில், ஒரு அசாதாரண தூய்மையுணர்வு, பிரபஞ்ச இருப்புத்தன்மையிலேயே ஓர் ஒழுங்கு இருக்கிறது.
நரி கோழியை கொல்வதாக இருக்கலாம். பெரிய விலங்கு சிறிய விலங்குகளை உணவுக்காக எடுத்துகொள்வதாக இருக்கலாம். இவையெல்லாமே பிரபஞ்ச ஒழுங்கின் வடிவமைப்பு. ஆனால் மனிதனைத் தவிர.
மனிதன் தலையிடாதபோது, இயற்கைக்கு அதற்கே உண்டான ஒரு மகத்தான அழகும், சமச்சீரும், இருந்துகொண்டே இருக்கிறது.

No comments:
Post a Comment