Saturday, November 28, 2020

 



தன்னைப் பற்றி கற்றுக்கொள்ளும்போதும் அறியும்போதும், உண்டாகும் தெளிவிலிருந்து ஒரு அசாதாரண வலிமை வந்தடைகிறது. அது அனைத்துவித அறிவீனமான செயல்களில் சிக்கிகொள்ளாமல் காக்கிறது. இந்த வலிமை ஒன்றை எதிர்த்து நிற்பதாலோ, பிடிவாதத்தால் ஒன்றை பிடித்து நிற்பதாலோ, அகத்தையின் சக்தியாலோ வந்தது அல்ல. மாறாக, நம் உள்ளிலும், புறத்திலும் நடப்பவற்றை கவனத்துடன் கண்காணிப்பதால் வந்ததாகும். அந்த வலிமை என்பது உள்ளன்பும், நுண்ணறிவும் உடையதாகும்.

#KSRPostings
#KSRadhakrishnan_Postings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
06-07-2020

No comments:

Post a Comment

2023-2024