—————————————
தமிழ் ஆட்சிமொழி சட்டம் - 1956 ஓமந்தூரார் முதல்வராக இருந்த போது நிறவேற்றப்பட்டு,பின் காலத்தில் 23.01.1957-அன்று நடைமுறைக்கு வந்தது. அன்றைக்கு பயிற்சி மொழி (போதனா மொழி) தமிழ் தான் என்று உறுதிபடுத்தப்பட்ட நாள்.
இருப்பினும், இதை நடைமுறைபடுத்துவதில் சுணக்கங்களும் தடைகளும் இருந்தவண்ணமே இருகின்றது. ஓமந்தூரார் இந்த காலக்கட்டத்தில் அவிநாசிலிங்கம் செட்டியார் முன்னெடுப்பில் பெரியசாமித் தூரன் ஆசிரியராக கொண்ட தமிழ் கலைக் களஞ்சியத்தை 8 தொகுப்புகளாக 1950-களில் துவங்கி 1967 காலகட்டங்களில் கடைசி தொகுப்பு வெளிவந்தது. ஒவ்வொரு தொகுப்பும் 1000 பக்கங்களுக்கு மேல் கொண்டது.
பின்பு அண்ணா தலைமையில் தி.மு.க ஆட்சிக்கு வந்தவுடன் அரசு கடித போக்குவரத்துகள் தமிழில் தான் இருக்கவேண்டும், என்று உத்தரவு பிரப்பிக்கப்பட்டது.
அதற்கு பிறகு தலைவர் கலைஞர் ஆட்சி, எம்.ஜி.ஆர். ஆட்சி என்ற நிலையில் தமிழக அரசு 8 அரசாணைகளை இதுகுறித்து இதுவரை வெளியிட்டு இருக்கின்றது. கடித போக்குவரத்து மட்டுமில்லாமல், தமிழில் கையெழுத்திடவேண்டும், செய்திகள், அரசு ஆணைகள் போன்றவை தமிழில் இருக்கவேண்டும் என்று இந்த அரசாணைகள் உறுதிபடுத்தின.
இந்தியாவில் பேச்சுவழக்கில் 1652 மொழிகள்இருந்ததாகஆவணபடுத்தப்பட்டுள்ளது. இவற்றில் நமது தமிழ் மொழி உட்பட 22 மொழிகள் இந்திய தேசிய மொழிகள் ஆகும். இதில் தமிழ், தனிசெம்மொழியாகும். சமஸ்கிருதம் வழக்கில் இல்லை. மற்ற மாநிலங்களில் தம்முடைய தாய் மொழிகளை முன்னிலைப்படுத்துவது போல இன்னும் சிறப்பாக தமிழ்மொழியை கொண்டு செல்ல வேண்டும். அதற்கான இலக்கை இன்னும் நாம் எட்டவில்லை என்பது தான் உண்மையான நிலையாகும்.
தமிழ் வாழ்க, கன்னித்தமிழ் சிறக்க, எட்டுத்திக்கும் தமிழை கொண்டு செல்வோம், எங்கும் தமிழ்! எதிலும் தமிழ்! என்ற கோசத்தை உறுதிபடுத்தும் வகையில் நம்முடைய உண்மையான செயல்பாடுகள் இருப்பது தான் தமிழுக்கு நாம் செய்கின்ற தொண்டுகளாகும்.
No comments:
Post a Comment