Tuesday, August 10, 2021

#மேட்டுர்_அணை_வரலாறு :

 


———————————————————-
90 ஆண்டை தொட்டது மேட்டூர் 16 கண் மதகு:
மேட்டூர் அணையின் பாதுகாப்பு வளையமாக உள்ள 16 கண் மதகு அமைந்து 90 ஆண்டுகள் ஆகின்றன. மேட்டூர் அணை பிரச்சனையில் பிரிட்டிஷ்காரர் காலத்திலேயே சட்ட மேலவையில் குரல் கொடுத்தவர் திருவாங்கூர் திவானாக இருந்த சி.பி.ராமசாமி அய்யர் ஆவார்.
மேட்டூர் அணையின் மொத்த நீர் மட்டம் 120 அடி ஆகும். 1925-ல் இந்த அணை கட்ட ஆரம்பித்து ஏறத்தாழ 9 ஆண்டுகளுக்கு பின் 1934-ல் பணி முடிக்கப்பட்டது. காவேரி நீரை பாதுகாத்து தமிழகத்துக்கு வழங்கும் அருட்கொடையாகும் மேட்டூர் அணை.
அப்பணி நடக்கும் போதே வெள்ளம் வந்தால், கட்டுமானத்துக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த நீரை வெளியேற்ற, 16 கண் மதகு கட்டுமானப் பணி துவங்கியது. 400 மீ., நீளமுடைய உபரி நீர்போக்கியில், 16 மதகுகள் அமக்கப்பட்டன. ஒவ்வொன்றிலும், 60 அடி நீளம், 20 அடி உயரம், 52.25 டன்னில் இரும்பு ஷட்டர்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஷட்டர்களுக்கு தேவையான இரும்பு தகடுகளை, அப்போதைய ஆங்கிலேய அரசு, ஸ்காட்லாந்தில் தயாரித்து, கப்பல் மூலம் இந்தியாவுக்கு எடுத்து வந்தது.
பின், ரயில் மூலம் மேட்டூர் அணைக்கு எடுத்து வரப்பட்டன. ஷட்டர் தகடுகள், கட்டுமான தளவாடங்கள் எடுத்து வரவே, சேலத்தில் இருந்து மேட்டூருக்கு இருப்பு பாதை அமைக்கப்பட்டது. ஷட்டர்கள் அனைத்தும், ரிவீட் மூலம் இணைக்கப்பட்டன. மேட்டூர் அணை நிரம்பினால், 30 டி.எம்.சி., நீரை, இந்த ஷட்டர்களே தாங்கி நிற்கின்றன. ஒவ்வொரு ஷட்டரும், 385 டன் அழுத்தத்தை தாங்கும் திறனுடையவை.
அணை நிரம்பி, 126 அடியை எட்டினால், 16 கண் மதகு வழியாக அதிகபட்சம் வினாடிக்கு, 3.56 லட்சம் கன அடி உபரி நீர் வெளியேற்ற முடியும். 130 அடியாக உயர்ந்தால், 4.41 லட்சம் கன அடி உபரி நீரை வெளியேற்ற முடியும். அணை கட்டும் முன், 1924-ல் காவிரியில் அதிகபட்சம் 4.56 லட்சம் கன அடி நீர் வந்துள்ளது. கட்டிய பின், 1961-ல் 3.01 லட்சம் கன அடி நீர் வந்து உள்ளது; மதகில் அதிகபட்சம், 2.36 லட்சம் கன அடி நீர் வெளியேற்றப்பட்டுள்ளது. 1931 ஜூன் 20-ல், 16 கண் மதகு கட்டி முடிக்கப்பட்டது.
இதை கட்டிய ஆங்கிலேய பொறியாளர், எல்லீஸ் நினைவாக, எல்லீஸ் ஸாடல் சர்பிளஸ் கோர்ஸ் என, மதகுக்கு பெயர் சூட்டப்பட்டது. வெள்ளப் பெருக்கில் உபரி நீரை வெளியேற்றி, மேட்டூர் அணையின் பாதுகாப்பு அரணாக விளங்கும், 16 கண் மதகுக்கு நடப்பாண்டு 90 வயதாகும் நிலையில், இன்னும் சிறந்த கட்டுமானத்துக்கு எடுத்துக்காட்டாக கம்பீரமாக காட்சியளிக்கிறது.
இந்த பிரம்மாண்டமான மேட்டூர் அணையை கட்டி கொடுத்துச் சென்றுள்ளார்
ராயல்என்ஜீனியர் கர்னல் டபுள்யூ.எம்.எல்லீஸ்.
இன்றைக்கு 48 ஆயிரம் கோடி
ரூபாய்கொட்டினால் கூட கட்டமுடியாத
பிரம்மாண்டத்தை கொண்டுள்ள இந்த
அணையை அன்றைக்கு 4 கோடியே 80லட்சம் ரூபாய் திட்டத்தில்
கட்டி முடித்துள்ளனர்.மலைக்க வைக்கும்
மாபெரும் திட்டம். யாவரும் வியக்கும் மதி நுட்பம்.
மேட்டூர் அணையைஇதுவரை இரண்டு முறை மின்னல்தாக்கியது.
இருப்பினும் அணைக்கு
எந்த பாதிப்பும் ஏற்படவில்லை
தமிழகத்தில் காவிரி கரையோரமாக
நிறைய நிலங்களும், விவசாயம் செய்யக்கூடிய ஆட்களும் இருந்தும் போதியநீர்ப்பாசன வசதி இல்லாததால் விவசாயம் சரிவர செய்ய முடியவில்லை.
இதைஉணர்ந்த ஆங்கிலேயே அரசு
காவிரியின் குறுக்கே அணை கட்ட
முடிவு செய்து இடத்தை தேடியது.
15 ஆண்டுகள் கழித்து அன்றைய
ஆங்கிலேய அரசின் சென்னை மாகாணகவர்னர் ஸ்டான்லி காவிரியின்குறுக்கே அணைக் கட்ட
உத்தரவிட்டார்.
இந்த உத்திரவை போட்ட கவர்னர்
ஸ்டான்லியின் பெயரால் மேட்டூர்
அணை இப்போது ஸ்டான்லி நீர் தேக்கம் என்றும் அழைக்கப்படுகிது.
இந்தஅணையில் கடல் போல காட்சியளிக்கும்அளவுக்குதண்ணீர் தேக்கப்பட்டது.
இந்திய அளவிலான
பெரிய அணைகளில் ஒன்றான இதன் உச்சநீர் மட்ட அளவாக 120 அடி வரை நீரைத்தேக்கலாம்.
அதன் பிறகு ஓடிவரும் நீர்
வரத்து யாவும் உபரியாக
அணைக்கட்டில் நிற்காமல் நிரம்பாமல் தானாகவே வெளியேறிச் செல்லும்அற்புதமான இயற்கையுடன் இணைந்த கட்டுமானப்பணி, எந்தக் காலத்திலும்அணைக்கோ அணை சார்ந்த கட்டுமான அமைப்புகளுக்கோ
ஒருக்காலும் ஊறுவிளைக்கமுடியாத தன்மைகளுடன் அமைக்கப்பட்டிருக்கிறது.
மேட்டூர்
அணை கட்டி முடிக்கப்பட்ட நாள்:
21.8.1934
அணைக் கட்ட ஆன செசலவு 4.80
கோடி.
அணையின் நீளம் 5.300 அடி
அணையின் கொள்ளளவு 93.50 டி.எம்.சி.
அணையின் உயரம் 214 அடி
அணையின்அகலம் 171 அடி
அணையின் சேமிப்பு
உயரம் 120 அடி
அணையின் நீர்பிடிப்பு
பரப்பளவு 59.25 சசதுர மைல் 2,71,000 ஏக்கர் பாசன வசதி அடைகிறது.
அணையின் மூலம் தினமும் 240 மெகாவாட் மின்உற்பத்தி செய்யப்படுகிறது.
சேலம்,நாமக்கல், ஈரோடு, திருச்சி, தஞ்சை,திருவாரூர்,
நாகப்பட்டனம் என மொத்தம்11 காவிரிப்
பாசனப் பகுதிமாவட்டங்களுக்கு மேட்டூர்
தண்ணீர் போகிறது.
மொத்தம் 16 லட்சம் ஏக்கர்
நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அது மட்டுமல்லாமல், மேட்டூர்
அணையை நம்பி 4000 மீனவர்கள்
குடும்பங்களும் உள்ளன.
மேட்டூர்அணையிலிருந்து வெளியே வரும் காவேரி அதே பெயரில் 106, கிலோமீட்டர் தூரம் செல்கிறது.
இதன் கிளை நதிகளாக கொள்ளிடம்,
பொன்னியாறு,கல்லணை கால்வாய்,
வெட்டாறு,வெண்ணாறு, குடமுருட்டி என்ற
பெயரில் பல நதிகளாக 694 கிலோ மீட்டர்தூரம் செல்கிறது.
இதை தாண்டி, 1904
கிலோ மீட்டர்தூரத்துக்கு வாய்கால்
மூலம் பாசன வசதியை கொடுக்கிறது.
இப்படி தமிழகத்தை நெற்களஞ்சியமாக்கும்
வகையிலும்,பல்வேறு மாவட்ட
மக்களின் தாகம் தீர்க்கும் வகையிலும்
,கிட்டத்தட்ட பத்து ஆண்டுகள் தன் மண்,மக்கள், உறவு மறந்தும், உணவும் தூக்கமும் துறந்தும் மேட்டூர் அணை
என்ற பிரம்மாண்டத்தை வடிவமைத்து
கட்டிக்கொடுத்த கர்னல் டபுள்யூ.எம்.எல்
லீசை, அணையும் நம் மனசும்
நிறைந்துள்ள இந்த நேரத்தில் நினைவு
கூர்வோம். ஆனால் தமிழகம் இன்று
நினைவு கூறவில்லை.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-8-2021.

No comments:

Post a Comment

Funeral Procession of Veer Savarkar In Bombay-1966

  Funeral Procession of Veer Savarkar In Bombay-1966 பாரத நாட்டிற்காக தன் வாழ்நாள் முழுவதையும் அர்ப்பணித்த ஒப்பற்ற சுதந்திரப் போராட்ட வீரர்...