Monday, August 9, 2021

#நீ சரியான பாதையில் பயணிக்க நினைக்கும்போதே

 


நீ சரியான பாதையில் பயணிக்க நினைக்கும்போதே,

நீ பல பிரச்சினைகளை சந்திக்க நேரிடுவாய்.
நிதானத்தையும்,
தன்னம்பிக்கையும் இழந்துவிடாதே!சற்று சிந்தித்து செயல்படு. சிகரத்தை தொட்டு விடலாம்....
இந்த மண்ணில் பிறந்திறந்து மடியும் அனைவரும் நுண்ணுணர்வுடன் சிந்தனைத்திறனுடன் இல்லை. அவர்களில் பெரும்பாலானவர்கள் அவர்களுக்குரிய அன்றாட வாழ்கையை மட்டுமே அறிவார்கள். இந்த பூமியில் அவர்கள் மானுடவாழ்கையை, அதற்கான அமைப்புகளை, அதற்கான நெறிமுறைகளை நிலை நிறுத்திக்
கொண்டு செல்கிறார்கள். ஆனால் மானுடம் மேலும் மேலும் தேடுகிறது. பழையவற்றை மறுபரிசீலனை செய்கிறது. புதியன படைக்கிறது. அந்த படைப்பியக்கம் பலலட்சம் அறிஞர்களால் கலைஞர்களால் செயல்வீரர்களால் ஒரு பெரும் பிரவாகமாக மானுடம் தோன்றிய நாள்முதல் இன்றுவரை சென்று கொண்டிருக்கிறது.
முதன்முதலில் தீயைக் கண்டறிந்த மூதாதை முதல், நம்முன் ஒரு சிந்தனையை முன் வைக்கும் அறிஞன்வரை அந்த தொடர்ச்சி உள்ளது. ஒரு வாசகனாக நீங்கள் அந்த பேரமைப்பை நிலைநாட்டும் பணியில் இருக்கிறீர்கள். வாசிப்பதன் வழியாக, சிந்திப்பதன் வழியாக அந்த நதியில் ஒரு துளியாக இருக்கிறீர்கள். அது ஒரு வாய்ப்பு, ஒரு பொறுப்பு.
விதி சமைப்பவர்களுக்குச் சலுகைகள் இல்லை, பொறுப்பு மட்டுமே உண்டு. அவர்கள் தங்கள் காலகட்டதின் எல்லா எதிர்மறை அழுத்தங்களையும் தாங்கித்தானாக வேண்டும். புறக்கணிப்புகளையும், ஏளனங்களையும் எதிர்கொண்டாகவேண்டும். அது அவர்களின் கடமை. அதை நிரைவேற்றுவதில் புனிதமான ஓர் உவகை உள்ளது. அதுவே அவர்களுக்குக் கிடைக்கும் பலன்.
நீங்கள் ஒரு நாடகத்தில் நடிக்கிறீர்கள். அந்த கதாப்பாத்திரத்தை இன்னொரு கதாப்பாத்திரம் தாக்குகிறது, அவமதிக்கிறது என்றால் அதை உங்களுக்கு நிகழ்வதாக எண்ணுவீர்களா என்ன? அது நீங்கள் அல்ல என உங்களுக்குத் தெரியும் அல்லவா? அதைப் போலத்தான் இதுவும். மனிதனுக்கு சில சமுக பொறுப்புகள் உண்டு. ஒரு சமுக இடம் உண்டு. அதற்காக அவன்சில வேலைகளைச் செய்கிறான். அவன் அல்ல நான். அவன் என்னுடைய வேடம்.
மேலும் பல்லக்குமேல் இருக்கும் போலி வாய்சொல் ஆசாமிகளும் வெறும் வேடத்தை தான் உண்மையென மயங்குகிறார்கள். அந்த வேடம் கலையும் போது அவர்கள் அடையும் அவமதிப்பும் வெறுமையும் தனிமையும் சாதாரணமானதல்ல. அப்படி உயரதிகாரியாக வலம் வருபவர்கள் அறுபது வயதில் ஓய்வுபெற்றபின் இருபதாண்டுகள் வரை அர்த்தம் இல்லாத அசட்டு வாழ்க்கை வாழ்வதை எங்கும் காணலாம். கடந்த காலத்தில் மூழ்கிக்கிடப்பார்கள் அவர்கள். ஓய்வுப் பெற்ற மறுநாளே மிக உயரதிகாரியாக் இருந்த ஒருவரை ’அந்தால போவும் வே’ என….
களசெயல் பாடு உள்ளவன்,விதி சமைப்பவனுக்கு ஒரு சிம்மாசனம் உண்டு. காலத்தில் அதை அவன் தியாகம் மூலமே ஈட்ட முடியும். அதுவே இயற்கையின் நீதி….

#k s r Post
09.08.2021

No comments:

Post a Comment

8 september

உனக்குப் புரியவில்லையென்றாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும் நீ புரிந்து கொண்டாலும் நிகழ்வுகள் அதன் போக்கிலேயே நிகழும்