தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள நேர்மையின் முகவரி தமிழகத்தின் முதல் முதல்வர் -விவசாயிகளின் முதல்வர் ஓமந்தூர் நினைவு நாளில் கூட தனது சமூக வலைத்தள பக்கங்களில் கூட நினைவை போற்றி பதிவை இடவில்லை.
————————————— தமிழக முன்னாள் முதல் முதல்வர் (பிரிமியர்) ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் தனது திரண்ட சொத்துக்கள் அனைத்தையும் வடலூர் வள்ளலார் மடத்துக்கு எழுதி வைத்து விட்டார்.எளிமையின் இருப்பிடமாக இருந்தார். அவருடைய ஆட்சியில் தான் விவசாய அபிவிருத்தி திட்டங்கள், அணைகள் மற்றும் பயிர் மேலாண்மை திட்டங்கள் வரையறை செய்யப்பட்டு விவசாயத்துறையில் மாபெரும் முன் எடுப்பு பணிகள் தொடங்கப்பட்டன. அத்துடன் தமிழ் மொழி வளர்ச்சி அடையவும், அனைத்து சாதியினர் ஆலய நுழைவு செய்து இறைவனை வழிபாடு செய்யவும் வகைசெய்யப்பட்டது. சமூக நீதி உத்தரவை முதன் முதலீபபிற்படுத்தப்பட்டோருக்கு தனி இட ஒதிக்கீடு கிடைக்க வழி செய்தார். அதற்கான சட்ட வரைவுகளை கொண்டு வந்து சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றினார். தமிழகம் எடுத்த முதல் அடி ஆகும். அதன் நீட்சியாகவே சமூகம் நீதி காக்கும் 69 % கிடைக்க அவரே முன்மாதிரியாக இருந்தார். இவர் ஸ்ரீ வில்லிபுத்தூர் கோபுரத்தை தமிழக சின்னம் ஆக்கினார். அப்பேர்ப்பட்ட உயர்ந்த சிந்தனையுடன் அறவழியில் ஆட்சி செய்த ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களுக்கு நீண்ட நெடிய காலம் அவர் அரசு புரிந்த சட்டமன்றத்தில் அவருக்கு என தனி படம் வைக்கப்படாமல் இருந்தது இந்த குறை எல்லாம் சுட்டி காட்டி என்னை போன்றவர்கள் எடுத்து வைத்த காரணத்தால் 73 வது சுதந்திர ஆண்டில் தான் அவருக்கு பட திறப்பு விழாவே செய்யப்பட்டது. தமிழகத்தின் இரண்டாவது முதல்வர் ராஜபாளையம் குமாரசாமி ராஜா அவர்கள் தனது திரண்ட சொத்துக்களை பொதுமக்கள் பயன்படுத்த வழி வகை செய்து விட்டு போனார். எளிமையும் தூய்மையும் அவருடைய இருப்பிடங்கள் ஆகின. தனக்கு என அரசங்கத்தின் ஒரு ரூபாய் கூட எடுக்கவில்லை. இப்படியான இரண்டாம் முதல்வர் குமாரசாமி ராஜா படம் இன்றுவரை சட்டமன்றத்தில் நிறுவி தர ஏற்பாடு இல்லை. சட்டமன்றத்துக்கு சம்பந்தம் இல்லாத எத்தனையோ பேர் ஊழல் வாதி படங்கள் இடம் பெற்று இருக்கும்வேளையில் இவருடைய படம் இன்று வரை இடம் பெறாதது ஏதோ வன்மத்தின் வெளிப்பாடு என்று தான் உணரவேண்டியது உள்ளது. இவை எல்லாம் திட்டமிட்ட புறக்கணிப்பு என்று எடுத்து கொள்ள தோன்றுகிறது. நேற்று தமிழக முன்னாள் முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் அவர்களின் 54 வது நினைவு நாளில் அவருடைய நினைவு போற்றும் ரெண்டு வரி எழுத தமிழக முதல்வர் அவர்களுக்கு நேரம் இல்லை என்று எண்ணும் போது உள்ளபடி நெஞ்சம் குமுறுகிறது. ஒரு இந்நாள் முதல்வர் அவர்களுக்கு ஓமந்தூர் ரெட்டியார் பற்றி நினைவு இல்லை என்று நினைக்கும் போது ஏற்றுக்கொள்ளும்படியாக இல்லை. வருங்காலத்தில் நமது தமிழக முதல்வர் இது போன்ற தவறுகளை திருத்தி கொள்வார் என்று எதிர்பார்க்கிறேன். #ஓமந்தூர்ராமசாமிரெட்டியார் #கேஎஸ்ஆர்போஸ்ட் #ksrpost 26-8-2024
No comments:
Post a Comment