முன்னாள் நிதிமந்திரி அப்போதிலிருந்து ஏன் நடவடிக்கைகள் எடுக்கவில்லையோ?.
வங்கிகளின் வாராக்கடன் கவலை தருகிறது
வங்கி விழாவில் ஜனாதிபதி பேச்சு
சென்னை: ''உலகின் மற்ற பகுதிகளில், வங்கிகள் செயல்பாடு பாதிக்கப்பட்டாலும், இந்திய வங்கி துறை சீராக செயல்பட்டு வருகிறது; எனினும், பெருகி வரும் வாராக்கடன் கவலை தரும் அம்சமாக உள்ளது,'' என, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி கூறினார்.
கரூர் வைஸ்யா வங்கியின் நுாற்றாண்டு விழா நிகழ்ச்சி, சென்னை பல்கலை நுாற்றாண்டு விழா மண்டபத்தில், நேற்று நடந்தது. அதற்கு தலைமை வகித்து, பிரணாப் முகர்ஜி பேசியதாவது:
ஒரு தனிப்பட்ட மனிதர் அல்லது நிறுவனம், நுாறு ஆண்டுகளை கடப்பது பெரிய விஷயம். அந்த மைல்கல்லை, கரூர் வைஸ்யா வங்கி கடந்துள்ளது பாராட்டுக்குரியது.
கடந்த, 1969ல் வங்கிகளை, இந்திரா காந்தி நாட்டுடைமை ஆக்கிய, ஆறு ஆண்டுகளுக்கு பின், 1975ல், மத்திய வங்கி மற்றும் வருவாய் அமைச்சராக பதவி வகித்தேன்; வங்கிகளுக்கு மட்டும் அமைச்சராக இருந்தவன் நான். அப்போது, நாட்டில் மொத்தம், 6,800 வங்கிக் கிளைகள் மட்டும் இருந்தன; தற்போது, ஒரு லட்சத்து, 17 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
பொதுவாகவே, இந்திய வங்கிகளின் நிர்வாகம் மற்றும் செயல்பாடு சிறப்பாக உள்ளது. உலக பொருளாதாரம் பாதிக்கப்பட்டபோது,மற்ற நாடுகளில், வங்கிகள் தத்தளித்தன; இந்திய வங்கிகள் சிறப்பாகவே செயல்பட்டன.எனினும்
, வங்கிகளில் வாராக்கடன் அதிகரித்து வருவது, கவலை அளிப்பதாக உள்ளது.
சமீபத்தில் ஓய்வுபெற்ற ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன், வாராக்கடன்களை வசூலிப்பதில் சிறப்பாக செயல்பட்டார். கடந்த, 2015 மார்ச்சில், வாராக்கடன்கள், தள்ளுபடி செய்த கடன்கள் மற்றும் வட்டி விகிதம் மாற்றப்பட்ட கடன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய, வங்கிகளைநொடித்து போக செய்யும், 'ஸ்ட்ரெஸ்ட் லோன்ஸ்' 10.90 சதவீதமாக இருந்தது; அது, கடந்த மார்ச்சில், 11.40 சதவீதமாக அதிகரித்துள்ளது.
பொது மற்றும் தனியார் வங்கிகளின் ஸ்ட்ரெஸ்ட் லோன்ஸ், 73 ஆயிரத்து, 887 கோடி ரூபாயில் இருந்து, 1 லட்சத்து, 70 ஆயிரத்து, 630 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது; அதனால், வங்கிகளில் கடன் அளிக்கும் தன்மை பாதிக்கப்படுகிறது.
இந்தியா போன்ற வளரும் நாடுகளில், அதிக கடன்கள் அளிக்க வேண்டிய தேவை உள்ள நிலையில், இது மோசமான விளைவை ஏற்படுத்தும். எனவே, வங்கிகள், கடன் தரும் போது, சூதனமாக யோசித்து, சரியானவர்களுக்கு தர வேண்டும். வங்கிகளில், பொதுமக்கள் நம்பிக்கையுடன் பணத்தை சேமிக்கின்றனர்; அதை பாதுகாக்கும் கடமை, வங்கிகளுக்கு உள்ளது. இவ்வாறு பிரணாப் முகர்ஜி பேசினார்.'ஜி.எஸ்.டி., கவுன்சில்!' :
இதுபற்றி, பிரணாப் பேசியதாவது: நாட்டின் பொருளாதாரத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தவிருக்கும், ஜி.எஸ்.டி.,எனும் சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு முறைக்கு, 20 மாநிலங்கள் ஒப்புதல் அளித்து விட்டன; அதனால், அந்த சட்டம், என் அங்கீகாரத்தை பெற்றது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும், ஒரே வரி விகிதத்தின் கீழ் கொண்டு வரப்படும். அதை நிர்ணயிக்கும், ஜி.எஸ்.டி., கவுன்சிலை, நிதி
அமைச்சகம் விரைவில் அமைக்கும். இதனால், நாட்டில் பன்முக வரி விகிதம் மறைந்து, ஒரே வரி விகிதம் அமலாகும்; பொருளாதாரம் மேன்மை அடையும்.இவ்வாறு அவர் பேசினார்.
No comments:
Post a Comment