இன்பமும் துன்பமும் பூமியின் - மிசை
யார்க்கும் வருவது கண்டனம்- எனில்
மன்பதை காக்கும் அரசர்தாம்-அற
மாட்சியைக் கொன்று களிப்பரோ?
....
ஆகப்பெரும் துயரத்தைச் சுமப்பவன்
ஒருபோதும் அழுவதில்லை.
பெரும் சஞ்சலத்தில் நீந்தும் அவனுக்கு
துடுப்பாய் இருப்பது
துயரமும், துக்கமும்தான்.
மேகம் உடைந்து, மழை சிதறி,
விழிகள் நிரம்பும் நேரம்..
தூரத்தே தெரியும் கரும்புள்ளியில்
கரையேறுவான்.
துயரம் சிலருக்கு வாழ்க்கையாகிறது
சிலருக்கு வழியாகிறது.
No comments:
Post a Comment