... நெடுஞ்சாலைகொள்ளை.. சுங்கச்சாவடி எனும் இந்திய அரசின் பகல்கொள்ளை...
வாடஸ்அப்பதிவிலிருந்து...
90 கி.மீ தேசிய நெடுஞ்சாலை போடுவதற்கு 80 கோடி செலவு ஆவதாக குறிப்புகள் சொல்லுகின்றன.
சென்னை முதல் திருநெல்வேலி வரை 626 கி.மீ தூரம் தேசிய நெடுஞ்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
90 கி.மீ சாலை அமைக்க 80 கோடி எனில்.,
630 கி.மீ சாலை அமைக்க 560 கோடி ரூபாய் செலவிடப்பட்டிருக்கலாம்...
வாகனம் வாங்குகிற போதே வாழ்நாள் சாலைவரி கட்டப்படுகிறது.
மேலும் வாகனத்துக்கு நாம் போடுகிற பெட்ரோல்., டீசலில் லிட்டருக்கு இரண்டு ரூபாய் சாலை வரியாக விதிக்கப்பட்டு அதையும் சேர்த்து வசூலித்து விடுகிறார்கள்...
சென்னை முதல் திருநெல்வேலிக்கு இடையில் 13 சுங்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது.
செங்கல்பட்டு சுங்கச்சாவடியில் நாளொன்றுக்கு 90000 வாகனங்கள் கடப்பதாக ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு வாகனத்துக்கு சராசரி 70 ரூபாய் எனக் கணக்கிட்டால் நாளொன்றுக்கு 63 லட்சம் சுங்கச்சாவடியில் வாகன வரி வசூலிக்கப்படுகிறது.
மாதம் 18கோடியே 90 லட்சமாகவும்.,
வருடத்திற்கு 226 கோடியே 80 லட்சம் ஒரு சுங்கச்சாவடியில் வசூலாவதாக அந்தப்புள்ளி விபரம் தெரிவிக்கிறது..
சென்னை முதல் திருநெல்வேலிக்கு இடையில் 13 சுங்கச்சாவடிகள் இயங்குகின்றன.
ஒரு சுங்கச்சாவடியில் ஆண்டொன்றுக்கு 226 கோடியே 80 லட்சம் எனில்..
13 சுங்கச்சாவடிகளில்.,
13 × 2268000000 = 2948 கோடியே 40 லட்சம்.
630 கி.மீ சாலை அமைக்க 560 கோடி.
இவர்கள் ஓராண்டில் மட்டும் இதற்குட்பட்ட 13 சுங்கச்சாவடிகளில் 2948 கோடியே 40 லட்சம் வசூலித்திருக்கிறார்கள்...
இது பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து வசூலிக்கப்பட்டு வருகிறது...
நாம் கணக்கிட்டது வெறும் 13 சுங்கச்சாவடிகளின் நிலவரம்தான்..
தமிழகம் முழுவதும் மொத்தம் 44 சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன..
அதையும் சேர்த்துக் கணக்கிட்டால்.,
மத்திய அரசு சுங்கவரி என்ற பெயரில் நம்மிடம் அடிக்கும் கொள்ளை நம்மை மூர்ச்சையாக்கிவிடும்...
நாட்டு மக்களுக்கு சாலை வசதியை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டுமென்ற நோக்கத்தை விட.,
சுங்கச் சாவடிகள் அமைத்து அதன் மூலம் மக்களின் பணத்தைக் கொள்ளையடிக்கும் அயோக்கியத்தனமின்றி இது வேறென்ன...?
சுங்கச்சாவடி அமைத்து மத்திய அரசு செய்யும் இந்தப் பகல்கொள்ளை தடுத்து நிறுத்தப்பட நாம் என்ன செய்யப் போகிறோம்....??
No comments:
Post a Comment