Thursday, September 8, 2016

மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரி .

மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரி .

வங்கக் கடலின் காற்றுக்கு மேலும் குளிர்ச்சி கூட்டியபடி கடற்கரைச்சாலையில் , கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் ராணி மேரிக் கல்லூரிதான் மெட்ராசின் முதல் பெண்கள் கல்லூரி . தென்னிந்தியாவைப் பொறுத்தவரையில் இரண்டாவது பெண்கள் கல்லூரி என்ற பெருமையும் இதற்கு உண்டு . கடலைப் பார்த்தபடி மரங்களுக்கு இடையில் அமைதியாக காட்சியளிக்கும் இந்த கட்டடம் கல்லூரியாக மாறியதே ஒரு சுவாரசியமான கதை .
ஜூலை 1914இல் மதராஸ் மகளிர் கல்லூரி என்ற பெயரில் தொடங்கப்பட்ட இது ,அதற்கு முன்பு ஹோட்டலாகவும், அதற்கும் முன்பு  தனியார் ஒருவரின் வீடாகவும் இருந்தது . கர்னல் பிரான்சிஸ் கேப்பர் (col.Francis Capper ) என்ற ராணுவ வீரர் கடற்கரைக்கு எதிரில் ஒரு வீடு கட்டினார் . எனவே இந்த வீடு கேப்பர் இல்லம் (Capper’s House ) என அழைக்கப்பட்டது . இவர் இந்தியாவை விட்டு வெளியேறும் போது , இந்த வீட்டை விற்று விட்டார் . அடுத்து அங்கு ஒரு ஹோட்டல் முளைத்தது . அதையும் மக்கள் கேப்பர் ஹோட்டல் என்று தான் அழைத்தனர் . மெரினா சாலைக்கு வந்த முதல் ஹோட்டல் அதுதான் . ஆனால் அந்த ஹோட்டலில் அதிக வருமானம் கிடைக்கவில்லை .

இதனிடையே 1910களில் பெண்களுக்கென ஒரு கல்லூரி தொடங்குவது குறித்து விவாதிக்கப்பட்டு வந்தது . இதற்கான இடம் தேடும் பணியும் ஒரு புறம் நடைப்பெற்றது . ஹோட்டலில் அதிக வருமானம் இல்லாததால் கேப்பர் இல்லத்தையே கல்லூரியாக மாற்றிவிடலாம் என முடிவு செய்யப்பட்டது .

No comments:

Post a Comment

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*

*You have to ask yourself what for and who for you are living and if don't have answers for it*, then you are living your life wrong and...