இன்று சர்வதேச மக்களாட்சி தினம்
........................................................
இன்று (15.09.2016) காலை பேரறிஞர் அண்ணா அவர்களின் 108 வது பிறந்த நாள்
-----
2007, நவம்பர் 8ல் ஐக்கிய நாடுகளின் பொது கூட்டம், உலக அளவில் இன்று ,ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் விதமாக செப்டம்பர் 15ஐ சர்வதேச மக்களாட்சி தினமாக அறிவித்தது. மனித உரிமைகள் மற்றும் அடிப்படைச் சுதந்திரம் போன்றவற்றின் முக்கியத்துவம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் முகமாக ஐநா இந்நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.இப்பொதுத் தீர்மானத்தை 192 உறுப்பு நாடுகள் ஏற்றுக்கொண்டுள்ளன.
மேலும், உலகளாவிய ரீதியில் எந்தவொரு தனிமனிதனும் தனது சொந்த அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாசார நடவடிக்கைகளை தனது வாழ்நாளில் அனுபவிக்கும் உரிமை கொண்டவன் என்று இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
அதாவது மக்களாட்சி என்பது பலருடைய அரசாங்கம்" என்று கிரேக்க அறிஞர் பிளேட்டோ வரைவிலக்கணப்படுத்தினார் அரிஸ்டாட்டில் மக்களாட்சி ஏழ்மை நிலையிலுள்ளோர் தங்களுக்காக நடத்தும் ஆட்சி என்று கூறினார். 'மக்களால் மக்களுக்காக மக்களால் புரியப்படும் ஆட்சி முறையே மக்களாட்சி ஆகும். அதாவது மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசே மக்களாட்சி அரசாகும். எனவே மக்களாட்சி அரசில் மக்களுக்காகவே ஆட்சி மேற்கொள்ளப்படும்." என்று முன்னாள் அமெரிக்க குடியரசின் ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் தெளிவு படுத்தினார்.
மேலும் அரசியல் அறிஞர் ராபர்ட்டால் அவர்களின் கருத்துப்படி 'சாதாரண மனிதர்களும் அரசியல் தலைவர்களைக் கட்டுப்படுத்தக்கூடிய அதிகாரத்தைப் பெற்றுள்ள ஆட்சி முறை ஜனநாயகமாகும்" என்றார். தற்போது உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் இந்த ஆட்சி முறையே நடைமுறையில் உள்ளது. பொதுவாக ஒரு நாட்டின் மக்கள், தங்களின் கருத்துக்களைத் தேர்தலின் மூலம் பதிவு செய்து, தங்கள் பிரதிநிதிளைத் தேர்ந்தெடுப்பர். தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் தனிக்கட்சியாகவோ அல்லது ஏனைய கட்சிகளுடன் கூட்டணியாகவோ ஆட்சி செய்வர். எனவே மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் மக்களுக்காகவே ஆட்சி செய்ய வேண்டும். மக்களின் தேவை அறிந்து மக்களுக்கு சேவையற்ற வேண்டும். ஆகவே இங்கு மக்கள்பிரதிநிதி என்பவர் மக்கள் சேவகரே.
கோட்பாட்டு ரீதியாக விளக்கம் அழகாக காணப்பட்டாலும் கூட ஆட்சிக்கு வரும் வரை மக்கள் சேவகர்களாக காட்டிக் கொள்ளும் இவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன் மாறி விடுவது பொதுவாக ஜனநாயக நாடுகளில் காணக்கூடிய நடைமுறை நிலைப்படாகும்.👀
இதை உணரும் விதத்தில்தான் சர்வதேச நாடுகள், ஐ.நா.வின் அமைப்புகள், அரச அமைப்புகள், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் தனியார் அமைப்புகள் என உலகில் அனைவரும் இத்தினத்தைக் ஆதரித்து ஜனநாயக் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டுமென ஐநா கேட்டுக்கொண்டுள்ளது. இதன்படி, இந்த தினத்தன்று உலகெங்கிலும், மக்களாட்சி குறித்த விழிப்புணர்வு பேரணிகள், பொது கூட்டங்கள் போன்றவை நிகழ்த்தப்படுகின்றன.
No comments:
Post a Comment