ஐ.நா. அவையில் 71வது கூட்டத்தில் அதன் தலைவராக பிஜி நாட்டைச் சேர்ந்த பீட்டர் தாம்சன் பொறுப்பேற்க உள்ளார். அவர் பொறுப்பேற்றவுடன் பல மாற்றங்களையும், சீர்திருத்தங்களையும் நிறைவேற்றுவேன் என்று கூறி வருகின்றார். ஐ.நா. மன்றத்தில் இன்றைக்கு உறுப்பு நாடுகளாக 193 நாடுகள் உள்ளன. இந்தியாவைப் போல இத்தாலி நிரந்தர உறுப்பினராக கடுமையாக முயற்சி செய்கின்றது. இந்தியா, ஜப்பான், ஜெர்மனி, பிரேசில் போன்ற நாடுகள் ஆப்பிரிக்க நாடுகளோடு இணைந்து தங்களுடைய உரிமைகளை நிலை நாட்ட தனி அமைப்பாக செயல்படவேண்டும் என்ற கருத்தையும் திரு. தாம்சன் வெளிப்படுத்தியுள்ளார். அதாவது க்ரூப் 77 என்றால் அணி சேரா நாடுகள் என்று பொருள். ஐ.நா. சபையின் சீர்திருத்தங்களில் ஏதாவது ஒரு குழுவில் இருந்து இந்த நாடுகள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்தவேண்டும் என்றும் தாம்சன் கூறியுள்ளார். ஜி 4 நாடுகளில் இந்தியாவும், ஜப்பானும் உள்ளன. இந்த இரு நாடுகளும் சீனாவுக்கு போட்டியாக கருதப்படுகின்றது. இந்த நாடுகள் வலியுறுத்துகின்ற சீர்திருத்தங்களில் சீனாவுக்கு அக்கறை இல்லை. மாற்று கருத்தைக் கொண்டுள்ளது.
ஐ.நா. உறுப்பு நாடுகள் 169 இலக்குகளை நிர்ணயம் செய்து அதற்கேற்ப எதிர்கால திட்டங்கள் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளன. இதில் எத்தனை செயல்பாட்டுக்கு வருமோ என்று இப்போது சொல்லமுடியாது என்று தாம்சன் குறிப்பிட்டுள்ளார். மேலும் மனித உரிமைகள் பிரச்சினையில் எங்களுடைய செயல்பாடுகள் திருப்தியளிக்கின்றது. போர்களை தடுக்க முடியவில்லை என்றாலும் அமைதிப் பணிகளை விரைவாக செய்கின்றோம். இந்த நிலையில் ஐ.நா. இப்போது இல்லை என்றால் இந்த நடவடிக்கைகளை செய்வது யார்? அந்த வகையில் ஐ.நா. பணிகளை பாராட்டவேண்டும் என்றும் தாம்சன் கூறியுள்ளார்.
ஐ.நா.வில் இந்தியா நிரந்தர உறுப்பினராக எல்லா தகுதியும் உள்ளது. சமீபத்தில் கூட இந்தியாவுக்கும், சீனாவுக்கு சென்றுவிட்டு வந்தேன். இந்த நிலையில் இந்தியா நிரந்தர உறுப்பினராக ஐ.நா.வில் இடம் பெறுவது நல்ல சூழல்தான் என்று தெரிவித்துள்ளார். ஆனால் செயல்பாட்டில்தான் வரவில்லை என்பதுதான் நமது கவலை.

No comments:
Post a Comment