பாண்டியாறு
-------------
தமிழகத்திற்க்கு தண்ணீர் கேட்டு அண்டை மாநிலங்களுடன் போராடி வரும் நிலையில் நீலகிரி மாவட்டம் கூடலூரில் உற்பத்தியாகி, கேரளா மாநிலம் வழியாக அரபிக்கடலில் வீணாக கலக்கும் #பாண்டியாறு நீரை பவானி அணைக்கு கொண்டு செல்ல வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்
மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ளது இயற்கை எழில் சூழ்ந்த கூடலூர். இப்பகுதியில் உற்பத்தியாகும் பாண்டியாற்றின் 14 டிஎம்சி நீர் வீணாக அரபிக் கடலில் கலப்பதாக கூறுகின்றனர் விவசாயிகள். இந்த நீரை பவானி சாகர் அணைக்கு திருப்பி விடுவதன் மூலம் தமிழகத்தின் கடைக்கோடியில் உள்ள மக்களும் பலன் பெற முடியும் என நம்பிக்கை தெரிவிக்கின்றனர் விவசாயிகள்
கடலில் வீணாகும் பாண்டியாற்று நீரை பயன்படுத்த 1960 களில் தமிழக கேரள அரசுகள் இடையே ஒப்பந்தங்கள் போடப்பட்டன இதன் படி அணைகளை கட்டி தேக்கப்படும் 14 டிஎம்சி நீரில் தலா 7 டிஎம்சியை தமிழகமும் கேரளமும் பகிர்ந்து கொள்வதெனவும் உற்பத்தியாகும் மின்சாரம் முழுவதையும் கேரளாவே எடுத்துக்கொள்ளவும் முடிவு செய்யப்பட்டது. இதன் படி 1968 -ல் பாண்டியாறு - புன்னம்புழா அணைகட்டும் பணிகள் தொடங்கியது. ஆனால் சுற்றுசூழல் பாதிப்பு , வனவிலங்குகளுக்கு ஆபத்து என பல காரணங்கள் கூறி இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இந்த நிலையில் தமிழகத்திற்கு பலன் தரும் இத்திட்டத்தை மீண்டும் தொடங்கக் கோரி கோரிக்கையும் வலுக்கிறது
பாண்டியாற்றின் குறுக்கே சிறிய தடுப்பணைகள் கட்டுவதன் மூலமும் பெரிய குழாய்களை அமைப்பதன் மூலமும் சுற்று சூழலுக்கு தீங்கு நேராத வகையில் தமிழகத்திற்க்கு தண்ணீரை திருப்பி விட முடியும் என யோசனை கூறுகின்றனர் சமூக ஆர்வலர்கள்
No comments:
Post a Comment