Wednesday, September 7, 2016

கவனத்தை ஈர்த்த இலக்கியப் பாடல் ஒன்று....

திணைமொழி ஐம்பது பாடல் 22

கார்காலம் வந்து விட்டது தலைவன் வந்து விடுவான் கவலைப் படாதே என்று தோழி தலைவிக்கு ஆறுதல் கூறுவது..

மென் முலைமேல் ஊர்ந்த பசலை மற்று என் ஆம்கொல்?-
நல் நுதல் மாதராய்!-ஈதோ நமர் வருவர்;
பல் நிற முல்லை அரும்ப, பருவம் செய்து,
இன் நிறம் கொண்டது, இக் கார்.

மென்மையான உன் மார்பகங்களில் படர்ந்த பசலை இனி என்ன செய்துவிடும் உன்னை..அழகிய நெற்றியை உடைய தலைவியே.. இதோ பார் நம் பற்களின் நிறம் போல முல்லை மலர்கள் பூத்து விட்டன..கார்காலம் வந்து விட்டது..இப்போதே உன் காதலன் வந்து விடுவார்..கவலைப் படாதே..

No comments:

Post a Comment

நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள்

  #நம்பமுடியாதஎனதுநாட்குறிப்புகள் #எனதுபயணங்கள் ——————————————————- ‘நம்ப முடியாத எனது நாட் குறிப்புகள்’ என்ற தலைப்பில். என் வாழ்க்கைப் ப...