Friday, September 16, 2016

மெட்ராஸ்

மெட்ராஸ்  மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட தாமஸ் பாரி , டேர் 

இங்கிலாந்து பயணத்தை ரத்து செய்த பாரியால் , தனது பரலோகப் பயணத்தை தடுத்து நிறுத்த முடியவில்லை . விடைபெறும் கோப்பையைப் பெற்றுக் கொண்ட அதே 1824 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ,தனது தொழிற்சாலை ஒன்றை ஆய்வு  செய்யப்  போன போது காலரா வந்து உயிரிழந்தார் பாரி .

‘உல்லாசமாக ‘ வாழ்க்கை நடத்திய தாமஸ் பாரி இரக்க மனசுக்காரரும் கூட ,அவர் எழுதி வைத்த உயிலே ,இதற்கு அத்தாட்சி . தனது உறவினர்களுக்கு மட்டுமின்றி வேலைக்காரர்களுக்கும் சொத்தில் பங்கு கொடுத்தவர் பாரி . தன் வீட்டில் வளர்க்கப்பட்ட கண் பார்வையற்ற மேரி என்ற பெண்ணிற்கு மாதம் 11ரூபாயும் , செல்லா என்ற வேலைக்காரப் பெண்மணிக்கு மாதம் 5 ரூபாயும் , மற்ற வேலைக்காரர்களுக்கு மூன்று மாத ஊதியமும் வழங்க வேண்டும் என்று தமது உயிலில் எழுதியிருந்தார். தன்னுடன் சேர்ந்து வாழ்ந்த மேரி ஆன் என்ற பெண்மணிக்கு மாதம் ஐந்து ரூபாயும் , உயில் எழுதப்பட்ட தேதியில் இருந்து 9 மாதத்திற்குள் அவருக்கு பிறக்க இருக்கும் குழந்தைக்கு ஐம்பது ரூபாயும் அளிக்கப்பட வேண்டும். என்றும் பாரி உயிலில் குறிப்பிட்டிருந்தார் .

பாரியின் மறைவுக்கு பின்னர் அவரது தொழில்களை டேர் பார்த்துக்கொண்டார் . 1838இல் குதிரை மீதிருந்து கீழே விழுந்ததில் அடிப்பட்டு அவரும் விண்ணுலகம் போய் சேர்ந்தார் . ஆனால் இரு நூற்றாண்டுகளை கடந்தப் பின்னும் , அந்த இரண்டு வர்த்தகர்களின் பெயர்கள் மட்டும் இன்னும் மறையவில்லை . எங்கிருந்தோ வந்து ,சென்னை வீதிகளில் அலைந்து திரிந்து , மெட்ராஸ் என்ற மாநகரின் வரலாற்றில் இடம்பிடித்துவிட்ட அந்த இருவரையும் பாரி முனையையும் , அங்கிருக்கும் டேர் ஹவுசும் இன்றும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கின்றன   

சுவையான தகவல்கள் 

தாமஸ் பாரியின் உடல் கடலூரில் அவர் அடிக்கடி சென்று வழிபட்ட தேவாலயத்தில் புதைக்கப்பட்டிருக்கிறது .

முருகப்பா குழுமத்தின் கட்டுப்பாட்டில் பாரி நிறுவனம் இன்றும் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது .

அமெரிக்க தூதரகம் சிறிது காலம் இந்த பாரி கட்டடத்தில் இருந்து இயங்கி இருக்கிறது .

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...