Thursday, September 15, 2016

டேர்ஹவுஸ்

மக்கள் மனதில் இடம் பிடித்த டேர்ஹவுஸ்- பாரி 

ஒரு பக்கம் சீற்றம் காட்டும் கடல் , மறுபுறம் உள்ளூர் மக்கள் தங்கியிருக்கும் கருப்பர் நகரம் என அதிகம் பேர் விரும்பாத இடமாக அது இருந்தது . அங்கு வாலாஜா நவாப்பிற்கு சொந்தமான வீடு ஒன்று இருந்தது . அதைத் தான்  வாங்கி அலுவலகமாக மாற்றினார் பாரி . 1817ஆம் ஆண்டிலேயே அனைவரையும் அண்ணாந்து பார்க்க வைக்கும் அடுக்குமாடிக் கட்டடமாக அது இருந்தது . 

மெல்ல வியாபாரத்தை விஸ்தரித்துக் கொண்டிருந்த பாரி , நிறைய ஏற்ற இறக்கங்களை சந்தித்தார் . இந்த சூழலில்தான் அவருக்கு பார்ட்னராக வந்து சேர்ந்தார்  ஜான் வில்லியம் டேர் ( John William Dare ) . பாரி  கட்டடத்தின் பெயர் ‘டேர்ஹவுஸ்’ என்று இருப்பதற்கு இந்த டேர் தான் காரணம் . கடல் மற்றும் கப்பல்கள் பற்றிய அறிவு டேருக்கு நிறைய இருந்ததால் பாரியும் இவரும் சேர்ந்து கப்பல் தொழிலில் நங்கூரம் பாய்ச்சி பணம் பார்த்தனர் .

இந்நிலையில் உடல் நலக் குறைவு காரணமாக 1823 இல்  இங்கிலாந்து திரும்ப  முடிவெடுத்தார்  பாரி . அவரின் வழியனுப்பு  விழாவுக்கு உள்ளூர் வர்த்தகர்கள் , பொது மக்கள் அனைவரும் சேர்ந்து ஒரு தங்க டீ கப்பை தயார் செய்தனர் . ஆனால் பாரி திடீரென தனது பயணத்தை ரத்து செய்து விட்டதால் ,  அவர்  ஊருக்கு போகா விட்டாலும் தயார் செய்த கப் வீணாகிவிடக் கூடாது என்று அந்த கோப்பையை 1824 பிப்ரவரி மாதம் அவருக்கு பொதுமக்கள் வழங்கினர் . இந்தளவு  மக்கள் மனதில் இடம் பிடித்ததற்கு பாரியின் மனிதாபிமானமும் , ஏழைகளுக்கு அவர் செய்த உதவிகளும் தான் காரணம் .#chennai

No comments:

Post a Comment

மா கவி பாரதி

மா  கவி #பாரதியை கொண்டட வலம்புரி ஜானின் இந்த ‘’பாரதி - ஒரு பார்வை’’ யும் (பதிப்பு-1982)அவசியம் வாசிக்க வேண்டும். #பாரதி #வலம்புரிஜானின்_பாரத...