Monday, September 12, 2016

மெட்ராஸ்

மெட்ராஸ்:ஆங்கிலேயர்களை பேஜாராக்கிய ரிக்ஷாக்காரர்கள்

அந்த காலத்தில் ஆங்கிலேயர்களோடு அதிகம் பழகிய ரிக்ஷாக்காரர்கள் தான் மெட்ராஸ் பாஷையின் வாத்தியார்கள் .  படா பேஜாரா பூட்ச்சுப்பா .....என அலுத்துக் கொள்பவர்கள் அதற்குள் ஒரு ஆங்கிலச் சொல் இருக்கிறது என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை .அந்த காலத்தில் இங்கிலாந்தில் இருந்து கப்பலில் வந்திறங்கும் ஆங்கிலேயர்களை , இன்று வெளியூர்வாசிகளை ஆட்டோக்காரர்கள் கையைப் பிடித்து இழுப்பதைப் போல , ரிக்ஷாக்காரர்கள் அன்புத் தொல்லையில் பிய்த்தெடுத்திருக்கிறார்கள். இதனால் கடுப்பாகும் சில ஆங்கிலேயர்கள் don’t badger me ( என்னை நச்சரிக்காதே ) என்று சொல்லி தவிர்த்திருக்கிறார்கள் .வெள்ளைக்காரன் சொன்ன அந்த badger- ஐ , நம்ம ரிக்ஷாக்காரர்கள் அப்படியே தங்களின் குப்பத்திற்கு எடுத்துச் சென்று பேஜார் ஆக்கிவிட்டார்கள் . இவை போக பக்கெட்டு (BUCKET) , பாமாயிலு (PALM OIL ) , பிஸ்கோத்து (BISCUIT) , என நிறைய சொற்கள் அப்படியே ஆங்கிலத்தில் இருந்தும் எடுத்தாண்டு கொண்டு இருக்கிறார்கள் .

ஆங்கிலம் மட்டுமின்றி மற்ற மொழிகளும் மெட்ராஸ் பாஷையில் கலந்திருக்கின்றன . ‘பஜாரி’ என்ற சொல் உருது மொழியில் இருந்து உருவானது . உருதுவில் பஜார் என்றால் சந்தை என்று அர்த்தம் . இதனால் சந்தைக்கடையில் நின்று சத்தம் போடுபவள் பஜாரி ஆகிவிட்டாள். ஆனால் பஜாரன் என்று ஒரு சொல் இல்லை . ஆக இதிலும் ஆணாதிக்கம் இருந்திருக்கிறது என்பதை கவனிக்கவும் . பேக்கு என்பது கூட உருதுவில் இருந்து வந்தது தான் . பேவ்கூஃப் என்றால் உருது மொழியில் முட்டாள் என்று அர்த்தம் . சென்னைவாசிகள் இந்த பேவ்கூஃபைத் தான் சுருக்கி பேக்கு என்று ஆக்கிவிட்டார்கள் . இப்படி ஒவ்வொரு சொல்லுக்கு பின்னும் ஒரு மொழியியல் வரலாறே இருக்கிறது .

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...