Sunday, September 11, 2016

பனம்பழம்

இன்றைக்கு கல்கி ப்ரியன் வந்திருந்தார். என்னிடம் "என்ன சார், பனம்பழம் என்றால் என்ன?" என்று கேட்டார். நான் சொன்னேன். பதநீர், நுங்கு சீசன் காலம் முடிந்தவுடன், நுங்கு கல்லாகி, பழமாகும். கல்லாகிப் போன இந்த பனம்பழம், பனையிலிருந்து தானாகவே தரையில் விழுந்துவிடும். பழத்தை தனியாக எடுத்து, வெயிலில் காயப்போட்டு, மணல் தரையில் குழிதோண்டி புதைத்து அதன்மேல் தண்ணீர் விட்டால் பனங்கிழங்கு வந்துவிடும். அந்த பனங்கிழங்கின் சுவையே அலாதியானது. எத்தனைப்பேர் இந்த பனம்பழத்தைப் பார்த்திருப்பார்களோ, சுவைத்திருப்பார்களோ என்று தெரியவில்லை. கிராம அடையாளங்களில் பனம் பழமும் மறக்கமுடியாத அக்கால அடையாளங்கள் என்று குறிப்பிட்டிருந்தேன். இன்றைக்கும் நெல்லை மாவட்டத்தில் இந்த பனம்பழமும், பனங்கிழங்கும் தவிர்க்க முடியாத ஒரு பதார்த்தமாகவே மக்களிடம் விளங்குகின்றது.

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...