தமிழகத்தின் அறிவுலகம் என்பது யாராலானது.
அறிவு என்பது வெறும் தரவும், ஒயில் மொழியும், கவர்ச்சியும் மொழுகிய ஒரு துய்ப்பல்ல. தொகுக்கப்பட்ட வரலாற்றுப் பட்டறிவை மக்கள் நன்றின்பால் செலுத்துவதே அறிவு.
நுனிப்புல் மேயும் மந்தை மாடுகளையும், கேளிர் நலனறியா நஞ்சுகளையும் அறிவார்ந்தோராக கண்டு வளர்கின்றது இன்றைய பெரும்பான்மை தமிழகம். இவர்கள் பதராகப் போகும் போக்கு தடுக்கப்பட வேண்டும்.
குறிப்பாக தமிழகத்தின் அறிவுப் பெட்டகங்கள் எல்லாம் அடையாளமற்ற சுவடிகளாக பரண் மேல் கிடக்க அரைகுறைகள் எல்லாம் ஊடகங்களில் மக்களுக்கு பாடம் எடுத்துக் கொண்டிருக்கின்றன.
மெழுகுப் பழங்கள் காய்த்துக் குலுங்க,
மணலற்ற ஆறுகளின் கண்ணீரும் வரண்டு போக
ஓடாத மானும், அடையாளம் இழந்த மக்களும்.
No comments:
Post a Comment