வின்ஸ்டன் சர்ச்சிலை சாக்லெட் மூலம் ஹிட்லர்!
.......
இரண்டாம் உலக போரின் போது, உலக பிரபலங்களான சர் வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின், பிரங்க்ளின் ரூஸ்வெல்ட் ஆகியோரை வெடிக்கும் தன்மை கொண்ட சாக்லெட் மூலம் கொலை செய்ய ஹிட்லரின் நாசி இயக்கம் திட்டமிட்டது. ஆனால் அந்த திட்டம் உளவாளி மூலம் முறியடிக்கப்பட்டது.
இரண்டாம் உலக போரின் போது, எதிரிகளை வீழ்த்த ஒவ்வொரு நாடும் பல திட்டங்களை திட்டியது. இதன்படி ஹிட்லரின் நாசி இயக்கத்தினர் பல தந்திரமான திட்டங்களை திட்டினர். இதில் நாசி இயக்கத்தினரின் ஒரு முக்கிய திட்டம் குறித்த திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.
இங்கிலாந்து பிரபலங்கள் விரும்பி சாப்பிடும் சாக்லெட் மூலம் கொலை செய்வதே அந்த திட்டம் ஆகும். சாதாரண சாக்லெட் போன்று தோற்றமளிக்கும் நீள்வடிவிலான வெடிக்கும் திறன் கொண்ட ஸ்டீல் குண்டு தயாரிக்கப்படும். இதன் மேலே சாக்லெட் மூலம் மூடப்படும் பின்னர் வழக்கம் போல தங்க காகிதத்தால் சுற்றப்பட்டு, பீட்டர்ஸ் என்ற பெயரில் கருப்பு கவரில் இட்டு இந்த சாக்லெட் தயாரிக்கப்பட்டது.
இந்த சாக்லெட்டின் ஒரு பகுதியை உடைத்தாலோ, கடித்தாலோ போதும், அடுத்த 7 நொடிகளில் வெடித்து சிதறிவிடும். இதன்மூலம் குறிப்பிட்ட மீட்டர் சுற்றுப்புறத்தில் உள்ள பலரும் பலியாக நேரிடும்.
இந்த தந்திரமான திட்டத்தை தீட்டிய ஹிட்லரின் நாசி இயக்கம், உலகின் பிரபலங்களான சர் வின்ஸ்டன் சர்ச்சில், ஜோசப் ஸ்டாலின், பிரங்கலின் ரூஸ்வெல்ட் ஆகியோரை கொலை செய்ய திட்டமிட்டது. இதற்காக ஜெர்மனியின் உளவாளிகளை நியமித்தது.
உளவாளிகளின் மூலம் பிரபலங்கள் பயன்படுத்தும் முக்கிய அலமாரிகள், உணவுப் பொருட்கள் வைக்கும் இடங்களை கண்டறிந்து, அங்கே இந்த வெடிக்கும் திறன் கொண்ட சாக்லெட்களை வைக்க திட்டமிடப்பட்டு இருந்தது.
ஆனால் நாசி இயக்கத்தில் இருந்த ரஷ்ய உளவாளி மூலம் இந்த கொடூர திட்டம் குறித்து இங்கிலாந்திற்கு தெரியவந்தது. இங்கிலாந்தின் பிரபல உளவு நிறுவனமான எம்.ஐ.5 யின் மூத்த அதிகாரி லாட் விக்டர் ரோச்சைல்டு என்பவர் இதை கண்டறிந்து, மேற்கண்ட வெடிக்கும் தன்மை கொண்ட சாக்லெட்டின் உருவத்தை வரைபடமாக வரைந்து தருமாறு ஒரு ஓவியரிடம் தெரிவித்தார்.
அந்த படத்தை இங்கிலாந்தில் ஆங்காங்கே வைப்பதன் மூலம் பொது மக்களை கூட இந்த அபாயமான சாக்லெட்டின் பிடியில் இருந்து காப்பாற்றலாம் என்று திட்டமிட்டார்.
இது குறித்து கடந்த 1943ம் ஆண்டு மே 4ம் தேதியிட்டு லாட் ரோச்சைல்டு, ஓவியர் லாரன்ஸ் பிஷ் என்பவருக்கு எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது,
அன்புள்ள பிஷ்,
வெடிக்கும் திறன் கொண்ட சாக்லெட் துண்டின் படம் ஒன்றை எனக்கு நீங்கள் வரைந்து தர வேண்டும். எதிரி நாட்டினரால் உருவாக்கப்பட்ட அந்த சாக்லெட் வெடிகுண்டு ஸ்டீல் மூலம் தயாரிக்கப்பட்டு, சாக்லெட்டால் மூடப்பட்டு, பார்ப்பதற்கு சாக்லெட் போலவே தோற்றமளிக்கும்.
ஆனால் சாக்லெட்டின் உட்பகுதியில் வெடிக்கும் திறன் கொண்ட தொழிற்நுட்பம் உள்ளது. சாதாரணமான முறையில் சாக்லெட் துண்டை உடைப்பது போல உடைத்தால், அது உடையாது. அதற்கு பதிலாக அதன் நடுப்பகுதியில் உள்ள வெடிக்கும் தொழிற்நுட்பம் துண்டப்பட்டு, அடுத்த சில நொடிகளில் வெடித்து சிதறும்.
இந்த சாக்லெட் குறித்து சில மேலோட்டமான உருவத்தை நான் இந்த கடிதத்துடன் இணைத்துள்ளேன். இந்த வெடிக்கும் தன்மை கொண்ட சாக்லெட் தங்க நிறத்திலான காகிதத்தால் சுற்றப்பட்டு, பீட்டர்ஸ் என்ற பெயரில் வெளியிடப்படுகிறது. வரைப்படத்தின் கீழே இது வெடிக்கும் திறன் கொண்ட சாக்லெட் என்று குறிப்பிட வேண்டும் என்று அந்த கடிதத்தில் தெரிவித்திருந்தார்.
கடந்த 2009ம் ஆண்டு ஓவியர் பிஷ் இறந்தார். இதன் பிறகு இந்த கடிதத்தில் கைப்பற்றிய ஓவியர் பிஷின் மனைவியும், செய்தியாளருமான ஜியன் பிரே, இது குறித்து கடந்த 2 ஆண்டுகளாக ஆராய்ந்தார். வெடிக்கும் திறன் கொண்ட சாக்லெட் வரைபடம் மூலம், ஜெர்மனியின் திட்டம் முறியடிக்கப்பட்டது குறித்து அவர் நீண்ட ஆராய்ச்சி மேற்கொண்டார்.
இதன்மூலம் ஓவியர் பிஷ், பல ஆண்டுகளாக பீட்டர்ஸ் என்ற பெயரில் வெளியான சாக்லெட் குறித்த வரைபடங்களை வரைந்து, எண்ணற்ற உயிர்களை காப்பாற்றி உள்ளது தெரியவந்தது.
இது குறித்து பிஷின் மனைவி ஜியன் பிரே கூறியதாவது,
ஓவியர் பிஷின் பணி, எம்.ஐ.5 உளவு நிறுவனம் மற்றும் லாட் ரோச்சைல்டு ஆகியோருக்கு மட்டுமின்றி எண்ணற்ற உயிர்களை காப்பாற்ற உதவியுள்ளது என்றார்.
.Paranji Sankaar
No comments:
Post a Comment