விஜயவாடாவில் நடந்த மாநில நிதியமைச்சர்கள் கூட்டத்தில் 15வது நிதிக்குழுவின் பாரபட்சமான பரிந்துரைகளை கடுமையாக சாடியுள்ளனர் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் நிதி அமைச்சர்கள்...
ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் நேற்று நடந்த நிதியமைச்சர்களின் ஆலோசனை கூட்டத்தில் பாரதிய ஜனதா ஆளும் கட்சியாக இல்லாத மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்கள் கலந்து கொண்டனர். இதில், மத்திய அரசு மாநிலங்களிடம் பெறப்பட்ட வரி வருவாயை, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு பிரித்து கொடுக்கும் முறையை திரும்பப் பெறுமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் மத்திய அரசு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக செயல்படுவதாகவும் சரமாரியாக குற்றம்சாட்டு முன்வைக்கப்பட்டது.
கேரளாவின் தலைநகரான திருவனந்தபுரத்தில் இதே போன்று தென் மாநிலங்களை சேர்ந்த நிதியமைச்சர்களின் ஆலோசனை கூட்டம் சமீபத்தில் நடந்தது. இதில், மத்திய அரசு வசூலித்த வரி வருவாயை பிரித்து தரும் நடைமுறை குறித்து ஆலோசிக்கப்பட்டது. இவர்களது இரண்டாவது கூட்டமாக நேற்று நடந்த கூட்டம் இருந்தது. இதில், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, டில்லி துணை முதல்வர், மனிஷ் சிசோடியா, பஞ்சாப் நிதியமைச்சர் மன்ப்ரீத் சிங், கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக், மேற்கு வங்கத்தில் இருந்து அமித் மித்ரா, கர்நாடக மாநில நிதித்துறையை சேர்ந்த மூத்த அதிகாரி ஆகியோர் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில்தமிழகம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் தரப்பிலிருந்து எவரும் பங்கு பெறவில்லை. இந்த விழாவை ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான, சந்திரபாபு நாயுடுதுவக்கி வைத்து பேசினார். அப்போது, மத்திய அரசு வசூல் செய்யும் வரிகள் இதுவரை, 1971ம் ஆண்டில் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மாநிலங்களுக்கு வரிவருவாயாக பகிர்ந்தளிக்கப்பட்டு வந்தது. ஆனால், தற்போது 15வது நிதி ஆணையத்தின் பரிந்துரையின்படி, 2011இல் எடுக்கப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தற்போது பகிர்ந்தளிப்பதால் வளர்ந்து வரும் தென் மாநிலங்கள் பாதிக்கப்படுகின்றன.
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவதில் கேரளா முன்னிலையில் உள்ளது. ஆந்திராவிலும் பல முயற்சிகள் செய்யப்பட்டு மக்கள் தொகையை கட்டுப்படுத்தி வருகிறது. வளர்ச்சிப் பாதையை நோக்கி அழைத்து செல்லும் மாநிலங்களைஇப்படி தண்டிப்பதுஅநியாயம்.
இந்த அநீதியை பொறுக்க முடியாது. நீதி கிடைக்கும் வரை போராட்டம் தொடரும். சிறப்பாக செயலாற்றும் மாநிலங்களை தண்டித்துவிட்டு ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாத மாநிலங்களுக்கு வாரி வழங்கும் செயலை தான் மத்திய அரசு செய்து வருகிறது.
கூட்டத்தில் பங்கேற்ற, பஞ்சாப் மாநில நிதியமைச்சர், மன்ப்ரீத் சிங், உணவு உற்பத்தியில் எங்கள் மாநிலம் முன்னோடியாக இருந்தாலும் மத்திய வரி வருவாயை பெறுவதில் அநீதியை சந்தித்து வருகிறோம். மத்திய வரி வருவாயில் எங்களுக்கு 29 சதவீதம் மட்டுமே வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு அதிகம் வழங்கப்படுகிறது. கூட்டாட்சி முறைக்கு எதிராக, மத்திய அரசு செயல்படுகிறது.
ஜி.எஸ்.டி.,க்கு பின், மாநில அரசுகளின் வரி வருவாய் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இந்த நிலையில் மத்திய அரசிடம் நிதி கேட்டு நிற்பது தர்ம சங்கடமாக உள்ளதாக பேசினார்.
டெல்லி துணை முதல்வரும், ஆம் ஆத்மி மூத்த தலைவருமான, மனிஷ் சிசோடியா, எல்லா அதிகாரங்களையும் கையில் வைத்துக் கொள்ள மத்திய அரசு விரும்புகிறது; இது அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மத்திய அரசு ஒதுக்கும் நிதி தங்களுக்கும் பற்றாகுறையாக உள்ளதாக கூறினார்.
ஆந்திர மாநில நிதியமைச்சர், ஒய். ராமகிருஷ்ணடூ, இந்த 15வது நிதி ஆணைய பரிந்துரையின்படி மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கப்படுவதால், ஆந்திராவுக்கு மட்டும் ஆண்டுதோறும் 8,000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது. இதை போல, தமிழகம், தெலுங்கானா, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி, ஒடிசா, பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களும் கடுமையாக பாதிக்கப்படும் என்றார்.
விஜயவாடாவில் நேற்று நடந்த கூட்டத்தில் காங்கிரஸ் மூத்த தலைவரும், புதுச்சேரி முதல்வருமான நாராயணசாமி, மத்திய வரி பகிர்ந்தளிப்பில் 15வது நிதிக் குழு பரிந்துரையை பின்பற்றுவது மாநில உரிமைகளை நசுக்குவதாக உள்ளது. இதனால் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற மாநில அரசுகள் திண்டாட வேண்டி உள்ளது. மத்திய அரசுமுக்கிய முடிவுகளை எடுப்பதற்கு முன்மாநில அரசுகளை கலந்தாலோசிக்க வேண்டும். அப்படி செய்யாத அரசை, கூட்டாட்சி மீது நம்பிக்கையற்ற அரசாகத் தான் பார்க்க முடியும். யூனியன் பிரதேசங்களின் மீதான மத்திய அரசின் பார்வை, சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப வேறுபடுகிறது. ஜி.எஸ்.டி., விஷயத்தில் எங்களை மாநிலங்களைப் போல நடத்துகின்றனர். நிதி பங்கீட்டின் போது, யூனியன் பிரதேசமாக நடத்துகின்றனர் என்று பேசினார்.
.............
The fifteenth finance commission is headed by a Bihari bureaucrat n k Singh he has today constituted advisory council the council has no members from south of vindhyas the members are Arvind Virmani Surjit Bhalla. Sanjeev Gupta Pinaki Chakraborty. Sajiid chinoy and Neelkanth Mishra all economists.
#15_வது_நிதிக்குழு
#15th_planning_commission
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
10-05-2018
No comments:
Post a Comment