Sunday, May 13, 2018

திலகர் - பயங்கரவாதத்தின் தந்தையா...



திலகர் - பயங்கரவாதத்தின் தந்தையா...
--------------------

Image may contain: 1 personராஜஸ்தான் மாநில கல்வித்துறை வெளியிட்டுள்ள எட்டாம் வகுப்பு பாடப் புத்தகத்தில் இந்திய விடுதலை போராட்டத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பாலகங்காதர திலகரை பயங்கரவாதத்தின் தந்தை (Father of Terrorism) என்று தவறான வரலாற்று செய்தி விதைக்கப்பட்டு உள்ளது. இத்தனைக்கும் ராஜஸ்தான் மாநிலத்தை பாஜக ஆளுகிறது. திலகர் முதன்முதலாக பகவத் கீதைக்கு இன்றைய உரைநடையில் எளிமைப்படுத்தி எழுதியவர். மேலும் பம்பாயில் முதன்முதலாக கணேஷ் (விநாயகர்) சதுர்த்தியை வெகு விமரிசையாக கொண்டாடத் துவங்கியவர்.



இந்திய விடுதலைப் போராட்டத்தில் தீவிரவாதிகள், மிதவாதிகள் என்று இருந்தார்கள். ஒரு பக்கம் நேதாஜி ஐ.என்.ஏ படை யை அமைத்தார். பகத்சிங் நாட்டு நலன் கருதி தீவிரவாதத்தை கையிலெடுத்தார். தமிழகத்தில் வ.உ.சி, சுப்பிரமணிய சிவா, பாரதி போன்றோர் திலகரின் தீவிரவாத அணுகுமுறையை ஆதரித்தனர். வ.உ.சிக்கு சுதேசிக் கப்பலை பம்பாயில் வாங்க உதவியவர் திலகர். உத்தமர் காந்திக்கே ஆதர்சமாக விடுதலை போராட்ட குணத்திற்கு முன்னோடியாக விளங்கியவர் திலகர் என்று அவரே சொல்லியுள்ளார். இப்படிபட்டவரை தவறாக பயங்கரவாதத்தின் தந்தை என்று பாடப்புத்தகங்களில் குறிப்பிடுவது ஏற்புடையதல்ல. 

#பாலகங்காதரதிலகர்
#Bala_Gangadara_Thilak
#இந்தியவிடுதலைப்போராட்டம்
#Indian_Freedom_Movement
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
13-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...