Sunday, May 6, 2018

புதுக்கோட்டையும், தொண்டைமான் மன்னர்களும்

சமீபத்தில் புதுக்கோட்டை சென்ற போது,திட்டமிட்ட வீதிகளும், நகர அமைப்பும், நீர்நிலைகள் அமைந்த விதமும், கல்லூரியும், பாடசாலைகளும், நூல் நிலையங்களும் அமைந்த நகரமாக இருநூறாண்டுகளுக்கு முன்பே அமைந்து நவீன நகரமாக அப்போதே காட்சித் தந்துள்ள சுவடுகள் தெரிகின்றன. இதற்கு காரணம் புதுக்கோட்டையை ஆண்ட தொண்டைமான் மன்னர்களே. (1661 முதல் 1789 வரை) 
விஜயநகர மன்னர்களின்  மேலாண்மையை பெயரளவில் கொண்டு கி.பி. 17ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் மதுரையை ஆண்ட நாயக்கரும், தஞ்சையை ஆண்ட நாயக்கரும் தமிழகத்தை ஆண்டுவந்த காலம் தான் தொண்டைமான் மன்னர்களின் காலம்.
இந்த பரம்பரையின் மூத்த மன்னர் ரகுநாத தொண்டைமான் விஜயநகர மன்னர்களின் ஆதிக்கத்திற்கு கீழாக ஆண்டு வந்தார் என்பதற்கு எந்தவித தரவுகளும் இல்லை. அவர்களின் ஆர்வத்தினால் தெலுங்கு மொழி இலக்கியத்தின் தொன்மையாக புதுக்கோட்டை திகழ்ந்திருக்குமா என்பது ஆராய வேண்டியதே. ஆரம்பக் காலத்தில் மன்னர்களிடம் இருந்த தெலுங்கு மொழிப் புலமையை கொண்டு அந்த காலத்தில் தெலுங்கின் வளர்ச்சியில் நீண்ட தொடர்புடையதாக விளங்குகிறது.

தஞ்சையை விஜயராகவ ரகுநாத நாயக்கரும், மதுரையை சொக்கநாத நாயக்கரும் ஆண்டு வந்த 1661ஆம் ஆண்டு காலக்கட்டத்தில் தனது தந்தையின் கட்டுப்பாட்டில் இருந்த கறம்பக்குடி. பிலாவிடுதி பகுதிகளின் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் ரகுநாதராய தொண்டைமான்.
ராமநாதபுரம் ரகுநாத தேவர் என்று அழைக்கப்படும் திருமலை சேதுபதியின் பொறுப்பில் இருந்தது. பெயரளவில் தஞ்சையும், மதுரையும், விஜயநகர பேரரசிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டி ராமநாதபுரம் மதுரைக்கு உத்தரவிட்டிருந்தது. விஜயநகர பேரரசின் பலம் குன்றிய நிலையில் பீஜப்பூர் கோல்கொண்டா சுல்தான்களும் தங்களின் செல்வாக்கை தமிழகத்தில் வலுப்படுத்திக் கொள்ள விரும்பிய போது, மராட்டியர் தங்களது ஆளுகைக்குத் தகுந்த பகுதியை இந்தப் பகுதியில் தேடிக்கொண்டிருந்தனர்.
ரகுநாதராய தொண்டைமான் விஜயநகர நாயக்கரின் படையுடன் சேர்ந்து பல போர்களில் கலந்துகொண்டு தனது வீரத்தை வெளிக்கொணர்ந்தார். இதன் மூலம் தனது செல்வாக்கை அவர் தக்கவைத்துக் கொண்டார். தொண்டைமானின் வீரத்தையும், திறமையும் பாராட்டி தஞ்சை மன்னர் பெரியராமாயணம் என்னும் விதுடன்வாளும், விலையுயர்ந்த வைர மாலை ஒன்றையும் அளித்தார். இன்றும் இவற்றை மன்னரின் குடும்பம் பாதுகாத்து வருகிறது. தஞ்சை நாயக்கர் படை பொறுப்பில் இருந்து நீங்கி தனது சொந்த ஊரான கறம்பக்குடிக்கு 1673ஆம் ஆண்டில் திரும்பினார். தொண்டைமான் மன்னர்கள் தங்களின் பெயருடன் சேர்த்துக் கொண்டுள்ள ‘விஜய’ எனும் பெயர் தஞ்சை நாயக்கர்களால் வழங்கப்பட்து.
ரகுநாதராய தொண்டைமான் அனைவரும் பாராட்டும்படி புதுக்கோட்டை பகுதியை ஆண்டு வந்தார். மதுரை நாயக்கர் மன்னர்களுடன் சுமூக உறவுடன் தனது பலத்தினை பெருக்கிக் கொண்டார்.
ராமநாதபுரம் சேதுபதி பரம்பரையில் இருந்து 1723ஆம் ஆண்டு ஏற்பட்ட அரசுரிமைப் போரில் பங்கேற்று திருமயம் கோட்டை, கீழாநிலைப் பகுதிளையும், பொன்னமராவதி, விராலிமலை ஆகிய பகுதிகளை தன்வசமாக்கி தனது எல்லையை விரிவாக்கிக் கொண்டார். ஒரு2 மிகப்பெரிய பலம் பொருந்திய ஒரு அரசை 44 ஆண்டுகள் உறுதியாக நிலைப் பெறச் செய்தார்.
தொண்டைமான் பரம்பரையில் இரண்டாவது மன்னர் விஜயரகுநாதராய தொண்டைமான். இவருக்கு திருக்கோகர்ணன் பிரகதம்பாள் கோயிலில் முடிச்சூட்டு விழா நடந்தது. குளத்தூரில் தனித்து செயல்பட்டுவந்த குளத்தூர் தொண்டைமான் பரம்பரையினரின் ஆளுகையில் இருந்த பகுதியை புதுக்கோட்டையோடு இணைத்துக் கொண்டார்.
தஞ்சை மீது படையெடுத்து வந்த ஹைதரலி சேனையுடன் எதிர்த்து போர் புரிந்த ஆங்கிலேய அரசுக்கு தேவையான படை உதவிகளை தொண்டைமான் செய்ததால் ஆத்திரமடைந்த ஹைதரலி படைகள் புதுக்கோட்டை மீது தாக்குதல் தொடுத்தனர். இதில் புதுக்கோட்டை பெருஞ்சேதம் அடைந்தது. இந்த தொண்டைமான் பரம்பரையை ஒரு சமஸ்தானமாக நிலைநிறுத்திய பெருமை 
விஜயரகுநாத தொண்டைமானையே சேரும்.
ராய ரகுநாத தொண்டைமானும், தனது தந்தையைப் போல 20 ஆண்டுகள் நல்லாட்சி புரிந்தார். இவரது ஆட்சியில் தான் முத்துகுமரப் பிள்ளை, வெங்கப்ப அய்யர் ஆகியோர் திறமைவாய்ந்த அமைச்சர்களாக இருந்தனர்.

தொண்டைமான் 1770 முதல் 1773 வரை அளித்த படை உதவிக்காக புதுக்கோட்டை படை வீரர்களின் செலவை ஏற்றுக் கொள்வதாக ஒப்புக் கொண்டிருந்த நவாப், அந்த பணத்தை கொடுக்க முடியாமல் போனதால் அதற்கு ஈடாக பட்டுக்கோட்டையின் ஒருபகுதியான 142 கிராமங்களை உள்ளடக்கி தொண்டைமானுக்கு அளித்தார். இந்த பகுதியில் இருந்து 53,000 சக்கரம் (அன்றைய செலவாணி பணம்) கிடைத்தது. இதுவரை தேவைப்பட்ட படை செலவிற்காகவும், இனிவரும் காலங்களில் படை உதவி அளிப்பதற்காகவும் இப்பகுதியை அளித்ததாக ஒப்பந்தம் உருவானது. இப்பகுதியை 1773இல் ஆங்கிலேய கம்பெனி துல்ஸாஜியைத் தஞ்சை மன்னராக மீண்டும் அமர்த்தியபோது தொண்டைமான் தஞ்சைக்கே இப்பகுதியை மீண்டும் வழங்கியது.
ஹைதர் அலியின் படையினர் இரு பிரிவுகளாகப் பிரிந்து திருச்சி பகுதியில் இருந்தும், தஞ்சை பகுதியில் இருந்தும் இருமுனைத் தாக்குதலைத் தொடுத்தனர். தஞ்சைப் படையை ஆதனக்கோட்டை அருகே எதிர்கொண்டு சோத்துப்பாளை அருகில் தோற்கடித்தது. மற்றொரு படையான திருச்சி படையை மலம்பட்டியில் தோற்கடித்தது.
இந்த நிகழ்ச்சிகளைக் கூறும் வெங்கண்ண சேர்வைக்கார்ர் வளந்தான் என்னும் நாட்டுப் பாடல்.
மல்லம்பட்டி வாடியிலே வந்த – அய்தர் சேனையை
தலையோட வட்டிச் சமர்பொருதும் தொண்டைமான்
புதுக்கோட்டை என்ற சொல் 18-19ஆம் நூற்றாண்டுகளில் அரிதாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. புதுக்கோட்டை தொண்டைமான் சமஸ்தானம், தொண்டைமான் சீமை (Thondaimaan Country) என்றுதான் அழைப்பட்டது. இன்றும்கூட சில தென் மாவட்டங்களில் புதுக்கோட்டை என்றால் தொண்டைமான் புதுக்கோட்டை என்றே அழைக்கப்படுகிறது.
- நன்றி, காவ்யா.
K.S. Radhakrishnan.
06-05-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...