------------------
பிரிட்டன் இளவரசர் ஹாரி - மேகன் மார்க்லேயுடைய திருமணம் லண்டன் அருகேயுள்ள விண்ட்சர் மாளிகையில் நடந்து முடிந்துள்ளது. ஆனால் பிரிட்டிஷ் பிரதமர் நேரில் வரவில்லை. ஏனோ தெரியவில்லை. இந்தியாவிலிருந்து பாஜகவிற்கு அபிமானமான தாமரைப்பூ அடையாளமாக அனுப்பப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த நடிகை பிரியங்கா சோப்ரா கலந்து கொண்டுள்ளார். காமன்வெல்த் நாடுகள் பூக்களை மையமாக வைத்து ஆடை அலங்காரங்கள் இந்த திருமணத்தில் நடந்துள்ளன. மார்க்லே கருப்பினத்தை சார்ந்த பெண்மணி. ஹாரியை விட மூத்தவர். கருப்பின பாதிரியார் கரி (Curry) அருமையாக மார்டின் லூதர்கிங்கை மேற்கோள் காட்டி தேவாலயத்தில் பேசினார். பழைய ரோல்ஸ் ராயல்ஸ் கார்களின் பவனி இந்த திருமணத்தில் இடம்பெற்றது. 15 வது நூற்றாண்டில் கட்டப்பட்ட செயின்ட் ஜார்ஜ் சேப்பலில் இந்த திருமணம் நடந்தது. அதன்பின் விண்ட்சர் மாளிகையில் குறிப்பிட்ட 1000 பேருக்கு மட்டும் மாலையில் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அனுமதிகள் வழங்கப்பட்டன. பிரிட்டன் பிரதமர் அரச குடும்பத்தின் திருமணத்தில் பங்கேற்பது வாடிக்கை. ஏனோ பிரிட்டன் பிரதமர் தெரேசா மே வெறும் வாழ்த்துக்களை மட்டும் சொல்லிவிட்டு லண்டனில் தன் இல்லத்திலேயே இருந்துவிட்டார்.
இவ்வளவு விழிப்புணர்வுகள் ஏற்பட்ட பின்பும் முடியாட்சியை (Monarchy) பெருமையாக ஏற்றுக் கொண்டுள்ள பிரிட்டன் மக்கள் இந்த திருமண விழாவில் ஊர்த்திருவிழா போல கூடி மகிழ்ந்தனர்.
தெரேசா மே போல தமிழகத்தின் பாரம்பரியமான புடவை ரவிக்கையோடு புகைப்படத்திற்கு காட்சித் தந்துள்ளார் மார்க்லே. அந்த ஒரு காரணத்திற்காக கருப்பின பெண்மணியும் நடிகையுமான மார்க்லேவை பாராட்டலாம்.
#பிரிட்டிஷ்_அரச_குடும்பத்_திருமணம்
#ஹாரி_மார்க்லே_திருமணம்
#royalwedding
#HarryandMeghan
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20-05-2018
No comments:
Post a Comment