Tuesday, May 15, 2018

இந்தியாவின் முதல் செய்தித்தாள்


இந்தியாவின் முதல் செய்தித்தாள்
-------------------------
இந்தியா மட்டுமல்லாமல், ஆசியாவிலேயே இன்றைய நவீன முறையில் கல்கத்தாவிலிருந்து ஹிக்கிஸ் பெங்கால் கெசட் என்ற செய்தித்தாள் 1780ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதி வெளியானது. இது தான் இந்தியாவின் முதல் செய்தி ஏடாகும். இந்த ஏடு கல்கத்தாவில் உள்ள 67, ராதா பஜார் என்ற முகவரியில் இருந்து வெளியிடப்பட்டது. ஆங்கிலேயரையும், கிழக்கிந்திய கம்பெனியை கடுமையாக விமர்சித்து, ஆங்கிலேயரின் போக்கினை கடுமையாக சாடியும் செய்திகளை வெளியிட்டது. இதனுடைய ஆசிரியர் ஜே..ஹிக்கி கிழக்கிந்திய கம்பெனியின் விரிவாக்கத்தை கடுமையாக கண்டித்து எழுதியிருந்தார்.

கிழக்கிந்திய கம்பெனியின் நிர்வாகமும், ஆங்கில அரசும் 1782ஆம் ஆண்டு மார்ச் 23ஆம் நாள் இவருடைய பத்திரிக்கை அலுவலகத்தை மூடி சீல்வைத்து, அவருடைய சொத்துக்களை பறிமுதல் செய்தது. ஹிக்கி, அன்றைய கவர்னர் ஜெனரல் வாரன் ஹாஸ்டிங் மனைவி லஞ்சம் கேட்டார் என்று கடுமையாக குற்றச்சாட்டினார். ஹிக்கி, வாரன் ஹாஸ்டிங்கை லஞ்சம் வாங்குபவர் என்றும், ஆண்மையற்றவர் என்றும் குற்றச்சாட்டுகளை வைத்தார். கல்கத்தா உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எலிஜா இம்பே மீதும் ஊழல் குற்றச்சாட்டை வைத்தார். இவையாவும் அப்போது பெரும் சூடுபிடித்த செய்திகளாகவும், விவாதங்களாகவும் நடந்தேறியது.
இறுதியாக உச்ச நீதிமன்றம் இவருடைய பத்திரிக்கைகளையும், அச்சிடும் இயந்திரங்களையும் பறிமுதல் செய்யும் வரை ஹிக்கி ஆங்கில அரசின் மீது குற்றச்சாட்டுகளை வைத்துக் கொண்டே இருந்தார்.
இந்தியாவின் முதல் செய்தி ஏடு இப்படித்தான் பிரசவமானது.

#இந்தியாவின்_முதல்_செய்தித்தாள்
#India’s_First_Newspaper
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
14-05-2018
Courtesy: India History

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".