Monday, May 7, 2018

தாகூர்

தாகூர் பிறந்த நாள் 

எட்டாம் வயதிலேயே கவிதை இயற்ற துவங்கியவர்,பதினாறாம் வயதில் சூரிய சிங்கம் கவிதையை வெளியிட்டார்.
பதினாறாம் வயதிலேயே சிறு கதை,நாடகத்தைவெளியிட்டார்.
நாட்டின் விடுதலைப்போரில் பங்கேற்றவர்.சட்டம் பயில பிரிட்டன் சென்றவர் இலக்கிய ஆர்வத்தால்  படிப்பை பாதியில் நிறுத்திவிட்டார்.
1883ஆம் ஆண்டு மிருனாளினி தேவி மணந்தார்.1901ஆம் ஆண்டுசாந்தினி கேதனயை நிறுவினார்.1913ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசை பெற்றார் .
1919ஆம் ஆண்டுஅமிர்தசரசில் ஆங்கிலேய அரசின் கொடூர நடவடிக்கைகளை கண்டித்து 1915ல் பிரிட்டிஷ் அரசு தமக்களித்த செவ்வீரர் பட்டத்தை துறந்தார்.

1872ஆண்டு முதல் 1938வரையிலான காலங்களில் ஐந்து கண்டங்களில் 31 நாடுகளுக்கு சென்று வந்தார்.அவருக்கு எச்,ஜி,வேல்ஸ்,ஆல்பர்ட் ஐன்ஸ்டீன் நட்பு.

அவர் இயற்றிய படைப்புகள் யாவும் குறிப்பாக கீதாஞ்சலியும்,இந்திய தேசிய கீதம் காலத்தால் அழியா சிரஞ்சீவிகள்.
என்றென்றும் நிலைத்து நிற்கும்.

நோய வாய்ப்பட்ட தாகூர் நீண்ட காலம் கழித்து 7.8.1941அன்று காலமானார்.
...........
இதயம் எங்கே அச்சமின்றி உள்ளதோ,
எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ,
சிறைவாச மின்றி
அறிவு வளர்ச்சிக்கு
எங்கே பூரண
விடுதலை உள்ளதோ,
குடும்பத்தின் குறுகிய தடைப்பாடுகளால்
வெளி உலகின் ஒருமைப்பாடு
எங்கே உடைபட்டு
துண்டுகளாய்ப்
போய்விட படவில்லையோ,
வாய்ச் சொற்கள் எங்கே
மெய்நெறிகளின்
அடிப்படையிலிருந்து
வெளிப்படையாய் வருகின்றனவோ,
விடாமுயற்சி எங்கே
தளர்ச்சி யின்றி
பூரணத்துவம் நோக்கி
தனது கரங்களை நீட்டுகிறதோ,
அடிப்படை தேடிச் செல்லும்
தெளிந்த
அறிவோட்டம் எங்கே
பாழடைந்த பழக்கம் என்னும்
பாலை மணலில்
வழி தவறிப்
போய்விட வில்லையோ,
நோக்கம் விரியவும்,
ஆக்கப் பணி புரியவும்
இதயத்தை எங்கே
வழிநடத்திச் செல்கிறாயோ, அந்த
விடுதலைச் சுவர்க்க பூமியில்
எந்தன் பிதாவே!
விழித்தெழுக
என் தேசம் !
#தாகூர்
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
07-05-2018


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...