Tuesday, May 22, 2018

ராஜீவ் துயரப் படுகொலையில் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை.

இன்று ராஜீவ் துயரப் படுகொலை நடந்து 28 வருடங்கள் ஆகிவிட்டன. இன்னும் பல மர்ம முடிச்சுகள் அவிழ்க்கப்படவில்லை. விசாரணையும் சரியான கோணத்தில் செல்லவும் இல்லை. இந்த வழக்கில் சம்மந்தப்படாத பல அப்பாவிகளும் தண்டிக்கப்பட்டுள்ளனர். 

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் சர்வதேச பத்திரிக்கையாளர்களின் பேட்டியின் போது இது துன்பவியல் என்று சொல்லியிருந்தார். இதை குறித்து பேபி சுப்பிரமணியம் மூலமாக ஏன் துன்பவியல் சம்பவம் என்று கூறுகிறீர்கள்? அதை தீர விசாரித்து உண்மையை வெளிக்கொணர வேண்டும்  என்றுதான தாங்கள் சொல் இருக்க வேண்டும் என செய்தியை பிரபாகரனுக்கு அனுப்பியிருந்தேன். இன்றும் ராஜீவ் படுகொலையில் பல மர்மங்களும், அதை குறித்து சம்மந்தப்பட்டவர்களும் தண்டிக்கப்படாமல் இருக்கலாம். நீதியின் கண்களின் மூலம் பல குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டாலும், ஒரு அப்பாவி தண்டிக்கப்படக்கூடாது என்ற அடிப்படை நீதியின் காரணமாக ராஜீவ் படுகொலையின் விசாரணையை ஆமை வேகத்தில் நடந்தும், நடக்காமல் இருப்பதைக் கண்டு பல சந்தேகங்கள் தான் எழுகின்றன. 

"சிவராசன் - டாப் சீக்ரெட்" என்ற தலைப்பில் தம்பி இரவிச்சந்திரனின் நினைவுகளை தொகுத்து ஏகலைவன் எழுதிய நூலின் அணிந்துரையில் இது குறித்து ஒரு 37 வினாக்களை இன்றல்ல, 1991 காலக்கட்டத்தில் ராஜீவ் படுகொலையின் போதே எழுப்பிய கேள்விகளை சேர்த்துள்ளேன்.

இணைப்பு. https://goo.gl/RMZ3nq

#ராஜீவ்_படுகொலை
#Rajiv_Assassination
#விடுதலைப்_புலிகள்
#பிரபாகரன்
#LTTE
#Prabhakaran
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
21-05-2018

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...