Friday, May 18, 2018

போராட்டங்களை குறித்து…

போராட்டங்களை குறித்து


மின்னம்பலம் இணைய இதழில் 

எனது கட்டுரை: 

‘’இன்றைய போராட்டங்கள் எப்படிப்பட்டவை?’’


https://www.minnambalam.com/k/2018/05/16/10

- வழக்கறிஞர் கே.எஸ். இராதாகிருஷ்ணன்

கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பே நதிநீர்இணைப்புகாவிரிமுல்லைப் பெரியாறுநெய்யாறுகொடுமுடியாறுபச்சையாறுஅடவிநயினார்அச்சன்கோவில் – பம்பை – வைப்பாறு இணைப்புஅழகர் அணை திட்டம்பரம்பிக்குளம் – ஆழியாறுதிட்டம்பாண்டியாறு – புன்னம்பழாசிறுவாணிபம்பாறுஅமராவதிகௌசிகா நதிஅத்திக்கடவு – அவினாசி குடிநீர் திட்டம்தென்பெண்ணையாறுஒகேனக்கல்திருமணிமுத்தாறுவசிஷ்ட நதிபொன்னியாறுபாலாறுகிருஷ்ணா நதி குடிநீர்திட்டம்பழவேற்காடு ஏரிகெடிலம் என 60க்கும்மேலான நீராதாரப் பிரச்சனைகள்ஊட்டிஇந்துஸ்தான் பிலிம் தொழிற்சாலை பிரச்சனைசேலம் இரும்பாலை தனியாருக்கு விற்பனைநெய்வேலி என்.எல்.சி பிரச்சனைநிலுவையில் உள்ளஅகல இரயில் பாதைகள் பிரச்சனைகடலூர் – நாகைதுறைமுகத் திட்டங்கள், 14 மீன்பிடித் துறைமுகங்கள்விமான நிலைய விரிவாக்கங்கள்கம்பம்பள்ளத்தாக்கில் கண்ணகி கோவில் பிரச்சனைகச்சத்தீவுசேது கால்வாய்த் திட்டம்குலசேகரப்பட்டினத்தில் ராக்கெட் தளம்கூடங்குளம்பிரச்சனைகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சி தாதுமணல் ஆலை பிரச்சனைதிருவணந்தபுரம் இரயில்வேகோட்டத்தில் இருந்து திருநெல்வேலி – கன்னியாகுமரியை மதுரை கோட்டத்துடன்இணைப்புஸ்டெர்லைட் ஆலை அப்புறப்படுத்தல்தேனி நியூட்ரினோ பிரச்சனைஹைட்ரோ கார்பன்மீத்தேன் பிரச்சனைகள்கொங்கு மண்டலத்தில்கெயில் எரிவாயு குழாய் பதிப்புநாமக்கல்பிளாட்டினம் உருக்குதமிழகத்தில் மின் கடத்திகள்மத்திய அரசின் அனுமதி மறுப்பு, 70 ஆண்டுகளாககோவில்பட்டிகயத்தாறுசெட்டிநாடுஉளுந்தூர்பேட்டைசோழவரம் விமானநிலையங்களை பயன்படுத்தாமல் கிடப்பில் போட்டதுஈழப் பிரச்சனைமீனவர் பிரச்சனைவிவசாயிகள்பிரச்சனைகள்கொங்கு மண்டலத்தில் நெசவாலைபிரச்சனைகள்எய்ம்ஸ் மருத்துவமனைகூடங்குளும்அணுக்கழிவுகளை எங்கே புதைப்பதுஉயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சிமொழிஉச்ச நீதிமன்றகிளையை சென்னையில் அமைத்தல், அந்தமான்நிகோபார் தீவுகளின் வழக்குகளை விசாரிக்கும்அதிகாரம் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றுதல்,இந்தியப் பெருங்கடலில் அந்நியர் ஆதிக்கத்தால்தமிழகத்திற்கு ஏற்படும் கேடுகள் என நீண்ட பட்டியலேஉண்டு.

இது போன்ற திட்டங்களை எல்லாம் இன்றைக்குதோன்றியதை போல நாம் நினைக்க வேண்டாம்இது20 ஆண்டுகளுக்கு முன் தோன்றிய திட்டங்கள்இதுகுறித்து பல வழக்குகளையும் தொடுத்துள்ளேன்இந்தபிரச்சனைகள் குறித்து பல செய்தித்தாள்களிலும்எழுதியுள்ளேன்இதை நாம் ஆரம்பத்திலேயேகவனிக்காமல் விட்டுவிட்டோம்எனவே இது தும்பைவிட்டு வாலைப் பிடிக்கின்ற கதைஇப்படி பலபிரச்சனைகளுக்கு இன்றைக்கு பல விதமானபோராட்டங்களை நடத்தினாலும்இவற்றைஆளவந்தார்கள் பொருட்படுத்தாமல் இருப்பது தான்இன்றைக்கு வாடிக்கையாகிவிட்டதுஇன்றையபோராட்டங்கள் 1950, 60களில் நடத்திய விதத்தில்தான் நாம் இன்றும் நடத்துகின்றோம்இது எந்தவிதத்திலும் ஆட்சியாளர்களுடைய சுரணைக்குஎட்டவில்லைபோராட்ட முறைகள் மாற வேண்டும்தமிழகம் குரல் கொடுக்கும் இத்திட்டங்கள் யாவும்கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பே பத்திரிக்கைகளில்செய்திகளாகவும் வந்த விடயங்கள் தான்ஆனால்இன்றைக்கு அது தமிழகத்தில் புகுந்து சீரழிக்கின்றதுஇது குறித்தான விரிவாக செய்திகளையே அறியாமல்சில போலிகள் எதற்கு போராட்டம் என்றேதெரியாமல் ஆட்களை அழைத்துஊடகங்களுக்குதீனி போடுவது தான் இன்றைய நிலைமைஇதைஎதிர்த்து போராட வேண்டுமென்றால் ஒரு வலுவானமக்கள் இயக்கமாக மாற வேண்டும்இதில்மற்றொன்றையும் கவனிக்க வேண்டும்உலகமயமாக்கல்தாராளமயமாக்கல் என்று 1991இல்எடுக்கப்பட்ட நிலையில் தான் இம்மாதிரியானபன்னாட்டு நிறுவனங்கள் தலைதூக்கிவிட்டனஇதைஒழிக்க வேண்டுமென்றால் கடுமையானபோர்க்குணத்தோடு போராடினால் தான் முடியும். 

மேலே சொன்ன தமிழகத்தின் திட்டங்கள் சிறுபட்டியல் தான்மேலும் இது போல 140 பிரச்சனைகள்எண்ணிக்கையில் உள்ளனஇது தமிழகத்தின்எதிர்காலத்திற்கு பெரும் கேடாக வந்துசேரவிருக்கின்றதுபோராட்டங்கள் என்பது போர்குணத்தோடுசர்வபரி தியாகத்தோடு அணுகினால்தான் ஓரளவாவது இந்த ஆட்சியாளர்களை அசைக்கமுடியும்.

தமிழ்நாட்டில் திமுகஅதிமுககாங்கிரஸ்பாஜகசிபிம்சிபிஐ போன்ற கட்சிளைத் தவிர்த்து தேர்தல் ஆணையத்தின் பட்டியலில் 154 அங்கீகரிக்கப்படாத பதிவு செய்த தமிழக கட்சிகள் உள்ளன. இந்த 154 கட்சிகளில் மேலும் 10 கட்சிகள் மக்களின் கவனத்தில் களப்பணியில் உள்ளன. மற்ற கட்சிகள் எல்லாம் ஏதோ ஒப்புக்கு போராட்டம் நடத்துவது வாடிக்கையாகிவிட்டது. 

ஒரு காலத்தில் இந்திய சுதந்திரப்போராட்டத்திற்கு உத்தமர் காந்தியார் தலைமையில்போராடியதுபொதுவுடைமை இயக்கத்தினர்அனைவரும் இந்தியாவில் தலைமறைவு வாழ்க்கைநடத்தி தங்களின் போராட்டங்களில் பல துயரங்களைசந்தித்ததெல்லாம் வரலாறு

திராவிட இயக்க வரலாற்றில் பெரியார்அண்ணாகலைஞர் போன்றவர்கள் நடத்திய போராட்டங்கள்சிறைச்சாலை வாசம் என அவர்கள் நடத்தியபோராட்டங்களில் தான் இன்றைக்கு நாமும்நடத்துகின்றோம்அன்றைக்கு அது பெரும்கொந்தளிப்பை ஏற்படுத்தியதுஇந்தி எதிர்ப்புபோராட்டம்ஈழத்தமிழர் பிரச்சனை என்பதெல்லாம்நேர்மையான நோக்கில் சென்றதால் பெரும்தாக்கத்தை ஏற்படுத்தியது.

ஆனால் இன்றைக்கோ இந்த போராட்டங்கள்எல்லாம் பார்த்தாகிவிட்ட நிலையில் ஆட்சியாளர்கள்ஏதோ போராட்டம் நடத்துகிறார்கள் என்ற அலட்சியப்போக்கு.

தமிழகத்தில் இதுவரை நடைபெற்ற போராட்டங்களால் தீர்வு காணப்பட்ட மக்கள் பிரச்சனைகள் எவ்வளவு.?

போராட்டங்களுக்கு ஏற்பாடு செய்த பொறுப்பாளர்களின் புலம்பல்களை யாரேனும் கேட்டதுண்டா.?

விவசாயிகள் நாராயணசாமி நாயுடு தலைமையில்போராடி, 48 விவசாயிகள் 1992 வரை காவல்துறையின் துப்பாக்கிச் சூடில் பலியாகியுள்ளனர்கடந்த 8 ஆண்டுகளில் விவசாயிகளுடையதற்கொலை தமிழகத்தில் மட்டும் 180க்கும் மேலாகிவிட்டதுஇப்படியெல்லாம் உயிரை மாய்த்தும்ஆட்சியார்கள் திருந்தவில்லை

இந்தியாவில் அவசர நிலைக் காலத்தில்ஜெயப்பிரகாஷ் நாராயண்நானாஜி தேஷ்முக்,மொரார்ஜி தேசாய்வாஜ்பாய்அத்வானி போன்ற பலதலைவர்கள் போராட்டங்களை நடத்தினர்வி.பி.சிங்கின் நேர்மையான அரசியலுக்கு நடத்தியபோராட்டங்களை எல்லாம் நினைத்து பார்க்கவேண்டும்

போராட்டம் என்பது ஒப்புக்கு நடப்பதல்லமக்களின் நலன்களை பேணிக்காக்க உரிமைக்குரல்எழுப்புவுது தான் போராட்டக்களம்போராட்டங்கள்ஒருசில நாட்களில் கூடிக் கலைவதும் அல்லஎனவேஇதய சுத்தியோடு பேராட்டங்களை முன்னெடுத்துஒரு ஆரோக்கியமான தளத்தை அமைத்து மக்கள்இயக்கமாக மாறினால் தான் அகந்தையில் உள்ளஆட்சியாளர்களை திருத்தமுடியும்இப்படிதான்பிரெஞ்சு புரட்சிரஷ்ய புரட்சிதொழிற் புரட்சிஐரோப்பாவில் ஏற்பட்ட மறுமலர்ச்சி இயக்கம்தேவாலயங்களின் நிர்வாகத்தில் ஏற்பட்டரிஃபர்மேசன்அமெரிக்கச் சுதந்திர போர்இந்தியவிடுதலைப்போர் என்பதெல்லாம் மக்கள் இயக்களாகமாறி தங்களுடைய உரிமைகளை மீட்டனர்போராட்டம் என்பது வெள்ளித்திரையில் நடிப்பதுபோல அல்லஅதற்கு நேர்மையான அணுகுமுறைவேண்டும்ஆசைகாட்டிவெறும் ஆட்களை திரட்டிதங்களுடைய சுயபுகழுக்காக நடத்தும்போராட்டங்கள் யாவும் ஒப்பனைகளாககலைந்துவிடும்

இந்த போராட்டக் களம் மதம்ஜாதிபுஜபலம்என்பதையெல்லாம் தாண்டிமனிதநேயம் என்பதுபோல அணுகும் போராட்டம் வரலாற்றில் இடம்பெறும்.

இருப்பினும் போராட்டங்களால் மக்களிடம்ஏற்படும் தாக்கங்களை நம்மால் கணிக்க முடியாதுபோராட்டம் இருமுனைக் கத்தியாக சில நேரங்களில்அமைந்துவிடும்.அது போராடுபவர்களுக்குஎதிராகவும் போகலாம்இன்றைய பேராட்டங்கள்பெரிதுபடுத்துவதற்கு அடிப்படை காரணம்ஊடகங்களாகும்இதில் சில கோடிகளும் நுழைந்துதங்களையும் அடையாளப்படுத்திக் கொள்கின்றனர்ஊடகங்களிலும் செய்தித் தாள்களிலும் தங்களுடயஇருப்புகளை வெளிக்காட்டிக் கொள்ள ஒரு சிலர்போலியான பாவனையான போராட்டங்களைநடத்துவது வாடிக்கையாகிவிட்டதுவெகுஜனபோராட்டங்கள் யாவும் கொள்கை லட்சிய வடிவில்தான் வெற்றி பெறும்.

முன்பு போராட்டங்கள் என்றால் இயற்கையாகமக்களிடையே பெரும் தாக்கமும்ஒரு உந்தலும்ஏற்படும்இப்போது ஒரு சிலர் நடத்தும்போராட்டங்கள் மக்களிடம் நம்பிக்கையைஏற்படுத்தவில்லைஇதை எல்லோரையும் குறிப்பிட்டுசொல்லவில்லைஇன்றும் ஒரு சில போராளித்தலைவர்கள் நம்மிடைய உள்ளனர்.

போராட்ட யுக்திகளையும்போர் குணங்களையும்இன்றைய நடைமுறை சூழலுக்கேற்ப மாற்றவேண்டும்அரசியல் ஆதாயம்சுயபுகழ்தன்னிலையை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்பதற்காக போராட்டம்நடத்தும் சிலரை மக்கள் புறக்கணிக்க வேண்டும்போராட்டம் என்பது மக்களால் மக்களுக்காகமக்களே நடத்துவது தான் போராட்டத்தின்இலக்கணமாகும்.

 

செய்தித்தொடர்பாளர்திமுக.,

நூலாசிரியர்

இணையாசிரியர்கதை சொல்லி,

பொதிகை – பொருநை - கரிசல்

rkkurunji@gmail.com

 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...