Tuesday, May 22, 2018

Ban Sterlite

#Bansterlite

 
மகாராஷ்டிராவின் ரத்தினகிரியில் 1993ல் இயங்கிய ஸ்டெர்லைட்டின் காப்பர் ஆலையை உள்ளூர் விவசாயிகள் தாக்கி உடைத்தனர், 200 கோடி மதிப்புடைய கட்டுமானங்கள் சிதைக்கப்பட்டன. அல்போன்ஸோ மாம்பழங்கள் விளைவதற்கு ஸ்டெர்லைட் ஆலை நச்சு காற்று பாதமாக என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு. 

தாக்கிய விவசாயிகள் மீது நடவடிக்கை எடுக்காமல் ஸ்டெர்லைட் அனுமதியை ரத்து செய்து அங்கிருந்து துரத்தினார் முதல்வர் சரத்பவார். அதன் பின்னர் குஜராத்தும், கோவாவும் அனுமதி மறுத்த ஸ்டெர்லைட் 1994ல் தமிழகத்தில் தூத்துக்குடியில் புகுந்து பல உயிர்களை
காவு வாங்கி விட்டது.

ஸ்டெர்லைட் போன்ற தாமிர உருக்கு ஆலைகள் மனித நடமாட்டம் அதிகமில்லாத தென் அமெரிக்க (லத்தீன் அமெரிக்கா) நாடுகளான சிலி போன்ற பகுதிகளில் தான் அமைக்கப்பட்டுள்ளது. 

தூத்துக்குடி ஒரு துறைமுக நகரம். இங்கு இது போன்ற நச்சுத்தன்மை வாய்ந்த தொழிற்சாலை அமைக்க வேண்டிய அவசியம் என்ன?


ஸ்டெர்லைட் நச்சு ஆலை அமைக்கப்பட்ட காலக்கட்டத்தில் தான் சென்னை அருகே உள்ள கும்மிடிப்பூண்டியில் டாபர் - டூபான்ட் எனும் வாகனத்தின் டயர் தயாரிப்பு ஆலை அமையவிருந்தது. எங்களைப் போன்றவர்களின் தொடர் போராட்டங்களால் அந்த ஆலை அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது. ஆனால் எப்படியோ ஸ்டெர்லைட் ஆலை அமைந்துவிட்டது.



#தூத்துக்குடி
#ஸ்டெர்லைட்
#Sterlite
#Tuticorin
#தகுதியே_தடை
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
22-05-2018

கோவில்பட்டியில் கடந்த 24-2-1997(காந்தி மைதானம் )
என தலைமையில் நடந்த ஸ்டெர்லைட்
எதிர்த்து மறியல் போராட்ட விளக்க
கூட்டத்தில் வைகோ அவர்கள் இது
குறித்து உரையாற்றினார்.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...