Saturday, May 12, 2018

பொது_வாழ்வு #தகுதியே_தடை

பொது வாழ்வில் நேர்மையானவர்கள் நாலாவது இடத்திற்கு தள்ளப்பட்டு, நாலாவது இடத்தில் இருந்த கழிசடைகள் முதலிடத்திற்கு வந்தால் காவிரி கிடைக்காது, நீட்தேர்வு நடக்கும், ஹைட்ரோ கார்பன், மீத்தேன், நியூட்ரினோ, கெயில் பதிப்பு போன்ற அனைத்து கேடுகள் நடக்கும். இதை யார் தேடிக்கொண்டது மக்களே. ஏன் உங்களுக்கு நல்லவர்கள், உழைப்பவர்கள் அடையாளம் தெரியவில்லையா? அரசியல் தத்துவமும், பொது வாழ்வுப் பணிகளை குறித்து அறியாத கழிசடைகளை போய் மேலே அமரவைத்தால் இதுதான். சாக்ரட்டீசினுடைய சினமும், பாரதியின் ரௌத்திரம் பழகு என்பது இந்த சூழலில் ஏற்பட்டாலும், கண்மூடி, வாய் பொத்தி, காது கேட்காமல் இருக்க வேண்டிய தண்டனையில் உள்ளனர். போங்கடா உங்கள் மக்களாட்சியும், தேர்தலும், நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஞானசூனியன்கள். நேர்மையாக பொதுவாழ்வில் உழைப்பவரை கண்டு கொள்ளாமல் போகாமல் போனால் நாளை வரலாற்று பக்கங்கள் உங்களை
மன்னிக்காதே...

#பொது_வாழ்வு
#தகுதியே_தடை
#Public_life
#KSRadhakrishnanpostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
12-05-2018

No comments:

Post a Comment

"OPERATION RUDRAM".

  "OPERATION RUDRAM".