ஸ்டெர்லைட் ஆலை அதிபர் கொக்கரிப்பு .......
————————————————
ஸ்டெர்லைட் ஆலையை மூடச்சொல்லி நடந்த போராட்டத்தில் 13 உயிர்களை பலி வாங்கியும், எண்ணற்றவர்கள் படுகாயமுற்ற நிலையில் அரசு ஆலையை மூட உத்தரவு பிறப்பித்தது.
இதனை எதிர்த்து நீதிமன்றத்தை நாடப்போவதாக படுபாதகன் கொக்கரிக்கின்றான். யார் கொடுத்த தைரியம்?
ஏற்கனவே வேதாந்தா நிறுவனத்தில் சட்ட ஆலோசகராக ப.சிதம்பரம் உள்ளார். மேலும் ஆதரவாக கபில்சிபில், அபிஷேக் சிங்வி, ராம்ஜெத்மலானி ஆகியோர் அல்லது ஆகியாரில் ஒருவர் ஆஜராகலாம். அருண்ஜேட்லி அமைச்சரவையில் இருப்பதால் அவரது அலுவலகத்தில் இருந்து சகாக்கள் ஆஜராகலாம். மக்கள் நலனுக்காக அரசியலில் இருப்பதாக சொல்லிக் கொள்ளும் இவர்கள் ஆட்சியில் இருந்தால் அரசியலையும், ஆட்சியில் இல்லாவிட்டால் வியாபரத்தையும் தன்னிரு கண்களாக கருதுபவர்கள்.
தன் வாழ்நாட்களுக்கு தேவையானதையும், தன் அடுத்த சில தலைமுறைகளுக்கு தேவையான சொத்துக்களை சேர்த்த பின்னர் ஏன் இந்த பணவெறி? இறுதியில் போகும் போது எடுத்துச் செல்ல போகின்றார்களா? சிந்திக்கட்டும்.
#ஸ்டெர்லைட்ஆலைமேல்முறையீடு
#KSRadhakrishnanpostings
#kSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
29-05-2018.
No comments:
Post a Comment