Tuesday, July 31, 2018

“கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்”

என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள் தான். அருணாசலக் கவிராயர் தில்லையாடி என்ற ஊரில் 1634இல் பிறந்தார். தருமபுர ஆதின வித்வானாக இருந்தார். அம்பலவானக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். இவரிடம் தான் கம்பராமாயணம் நன்கறிந்த அறிஞராக விளங்கிய சட்டநாதபுரம் கோதண்டராமய்யர், வெங்கட்ராமய்யர் என்ற சங்கீத விற்பன்னர்கள் இராமாயணக் கீர்த்தனைகளை பயின்றனர். இராமாயணக் கீர்த்தனைகளில் அருணாசலக் கவிராயர் பாடிய அந்த வரிகள் வருமாறு.

“விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகுப் போலும்
மடங்கொண்ட பாந்தள் வாயில் 
பற்றிய தேரைப் போலும்
திடங்கொண்ட ராம பாணம்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்! ”

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2018

கதைசொல்லி, 32வது இதழ்.

கதைசொல்லி, 32வது இதழ் தயாரிப்பு பணிகள் துவங்கியுள்ளன. இந்த இதழை சுற்றுச்சூழல் ஆர்வலரும், தற்சார்பு இயற்கை விவசாய போராளியுமான சேலம் ஆரண்ய அல்லி (@aaranya.alli) தயாரிக்கின்றார். படைப்புகள் அனுப்ப விரும்புவோர் நாட்டுப்புறவியல் தொடர்பான கட்டுரைகள், கதைகள், கவிதைகள், தரவுகளை மட்டுமே அனுப்பவும். வரலாற்றுக் கட்டுரைகளையும் அனுப்பலாம். கீழ்க்குறிப்பிட்ட மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கும்படி நண்பர்களிடம் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

ஆசிரியர், கி.ரா., அவர்களின் பரிசீலனைக்குப்பின் பெறப்பட்ட படைப்புகள் இந்த இதழில் இடம்பெறும்.

#கதைசொல்லி
#கதைசொல்லி_32வது_இதழ்
#kathaisolli_32nd_issue
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2018

கடன் கொண்டான் நெஞ்சம் போலும் கலங்கினான் இலங்கை வேந்தன்

“கடன் கொண்டான் நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்”

என்ற வரிகளை பலர் கம்பராமாயணத்தின் வரிகளாக கருதுகின்றனர். ஆனால் இவ்வடிகளை இராமாயணக் கீர்த்தனைகள் என்ற நூலில் சீர்காழி அருணாசலக் கவிராயர் எழுதிய வரிகள் தான். அருணாசலக் கவிராயர் தில்லையாடி என்ற ஊரில் 1634இல் பிறந்தார். தருமபுர ஆதின வித்வானாக இருந்தார். அம்பலவானக் கவிராயரிடம் தமிழ் பயின்றார். இவரிடம் தான் கம்பராமாயணம் நன்கறிந்த அறிஞராக விளங்கிய சட்டநாதபுரம் கோதண்டராமய்யர், வெங்கட்ராமய்யர் என்ற சங்கீத விற்பன்னர்கள் இராமாயணக் கீர்த்தனைகளை பயின்றனர். இராமாயணக் கீர்த்தனைகளில் அருணாசலக் கவிராயர் பாடிய அந்த வரிகள் வருமாறு.

“விடங்கொண்ட மீனைப் போலும்
வெந்தழல் மெழுகுப் போலும்
மடங்கொண்ட பாந்தள் வாயில்
பற்றிய தேரைப் போலும்
திடங்கொண்ட ராம பாணம்
செருக்களத் துற்ற போது
கடன்கொண்ட நெஞ்சம் போலும்
கலங்கினான் இலங்கை வேந்தன்! ”

#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
31-07-2018

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...