Saturday, July 21, 2018

அத்வானி, பிஜேபி...

பலருக்கும் அரசியலில் பாலபாடம் கற்று தந்த பிஜேபியின் பீஷ்மர் அத்வானி, நேற்று நாடளுமன்றத்தில் இருக்கையில் அமைதியாக !!!? இதுதான் இன்றைய பொது வாழ்வு. தகுதியே தடை. நேர்மையான நீண்ட களப்பணி, இன்றைய வியாபார அரசியலில் அவமானம்.... இதை உணர்வுப்பூர்வமாக சந்தித்தவர்களுக்குத் தான் அதன் வேதனைகள் புரியும். *****
அது திருதராஷ்டிரன் ஆலிங்கனமா....? அப்போது அத்வானி மனது பல அரசியல் கதைகளைக் கொண்ட சூழ்மண்டலமாக இருந்திருக்கும். //பாரதப்போரில் வென்றபின் திருதராஷ்டிரனை சந்தித்த போது பீமனை கட்டிப்பிடித்து வாழ்த்த அருகில் வரச்சொன்னான். கிருஷ்ணன் பீமன் பயிற்சி செய்த இரும்புச்சிலையை அருகில் நகர்த்தி வைத்தான். திருதராஷ்டிரன் சிலையக்கட்டிப்பிடித்த போது அது நொருங்கியது. பீமன் பிழைத்தான். நிகழ்கால பீமன் பிழைப்பானா, நொறுங்குவானா காலம் சொல்லட்டும்.// #KSRadhakrishnanpostings #KSRpostings கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 21-07-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...