திருநெல்வேலி மாவட்டத்தில், கடற்கரை
தாது மணல் சுரங்கத்திற்கான குத்தகை ஒப்பந்தங்களில் அனுமதிக்கப்பட்ட 52
சுரங்கங்களில், 38 சுரங்கங்களில் 412.99 ஏக்கர் பரப்பில்,
90,29,838 டன் வரை சட்டத்திற்கு புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.
இதே தூத்துக்குடி மாவட்டத்தில், ஆறு சுரங்கங்களின்
குத்தகைகளில் அனுமதிக்கப்பட்ட சுரங்கங்களில் மூன்று சுரங்கங்களில் உள்ள
66.18 ஹெக்டேர் பரப்பில், 10,29,955 டன் வரை சட்டத்திற்கு புறம்பாக தாது
மணல் அள்ளப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில், ஆறு சுரங்கங்களின்
குத்தகைகளில் அனுமதிக்கப்பட்ட சுரங்கங்களில் மூன்று சுரங்கங்களில் உள்ள 4.05
ஏக்கர் பரப்பில், 54,446 டன் வரை சட்டத்திற்கு புறம்பாக தாது மணல் அள்ளப்பட்டுள்ளது.
தென் மாவட்டங்கள்
இயற்கையின் அருட்கொடையான தாது மணலை தனியார் கபளீகரம் செய்து அவர்கள் கொழுத்து வாழ அரசுகள்
பாராமுகமாக இருந்தால் எப்படி?
#தாது_மணல்_கொள்ளை
#Minerals_Sand
#beach_sand_mining
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
08-07-2018
No comments:
Post a Comment