அமைதி பெற ,கவனமும், வேலையும் தேவைப்படுகிறது.
அமைதி, புத்தகங்களை வாசிப்பதன் மூலமோ, சொற்பொழிவை கேட்பதன் மூலமோ, கூட்டு அமர்தலின் மூலமோ, உலகை விட்டுச் சென்று மடாலயத்தில் தங்குவதின் மூலமோ அனுபவிக்கக்கூடியது அல்ல. இவையெல்லாம் அமைதியை கொண்டுவந்துவிடாது. அமைதி, தீவிர மனோதத்துவ வேலையை கோருகிறது.
"பிறரைவிட நானே சிறந்தவன்" என்கிற அந்த ‘மையத்தை’ கூர்மையாக விழிப்புகொள்ளவேண்டும் – உனது பயம், 'என்ன நடக்குமோ' என்ற கவலை, குற்ற உணர்வு ஆகிய எல்லாவற்றையும் விழிப்புகொள்ள வேண்டும். இவற்றை போக்குவதை குறித்துள்ள ஆழ்ந்த உத்வேகம் உள்ளபோது, அந்த உத்வேகத்திலிருந்து அமைதியின் அழகு பிறக்கிறது.
#
#Jkrishnamurti #ஆன்மீக #அத்வைதம் #மதம் #நாத்திக #ஆத்திக #மனம் #உளவியல் #பகுத்தறிவு #கல்வி
#Jkrishnamurti #ஆன்மீக #அத்வைதம் #மதம் #நாத்திக #ஆத்திக #மனம் #உளவியல் #பகுத்தறிவு #கல்வி
#KSRadhakrishnan_Postings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
12-07-2018
No comments:
Post a Comment